Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊழலில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. இந்த நிலையில் பாமகவை குறை சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை !

ஊழல் பெருச்சாளிகளான திமுகவும் அதிமுகவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது புதிதல்ல. இரு தலைமுறைக்கும் மேலாக  திமுக அதிமுக சண்டை வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது, தமிழகமும் தேய்ந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்கள் இருவர் சண்டையும் தமிழகம் முன்னேற வழிவகுக்கவில்லை. மாறாக தமிழும், தமிழர்களும், தமிழக வளமும் சீரழியவே பயன்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் குறித்து திமுக ஸ்டாலின் கடிதம் எழுத, அந்த கடிதத்திற்கு பாமக அன்புமணி ஒரு கடிதம் எழுதினார். அதிமுகவை விமர்சனம் செய்யும் தகுதி திமுகவிற்கு இல்லை என்பதை அன்புமணி குறிப்பிட்டு இருந்தார் . இந்த கடிதத்திற்கு நேரடியாக பதில் கூற முடியாத ஸ்டாலின் வேறு ஒரு திமுக நபரான தாமரை செல்வனை வைத்து மிகவும் அநாகரீகமாக பதில் கடிதம் எழுதியுள்ளார் ஸ்டாலின். இக்கடிதத்தில் அன்புமணி சார்ந்த சாதியை வைத்தே அவருக்கு சாதி குறித்த பாடத்தை நடத்தியுள்ளார் தாமரைச் செல்வன். குறிப்பிட்ட சாதிக்கு அன்புமணி என்ன செய்துள்ளார் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். இது தான் அன்புமணிக்கு ஸ்டாலின் கொடுக்கும் பதிலா ?

ஸ்டாலினின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக அன்புமணி, லாவணி எல்லாம் வேண்டாம், ஒரே மேடையில் நேரடி விவாததிற்கு திமுக தயாரா என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி.  இதற்கு, அன்புமணிக்கு தன்னுடன் விவாதம் செய்யும் தகுதி இல்லை என்று திமிராகவும் பேசியுள்ளார் ஸ்டாலின். இவருக்கு முதலில் தமிழகத்தில் அரசியல் செய்ய என்ன தகுதி உள்ளது என்பதை தமிழ் மக்களிடம் விளக்க வேண்டும் ஸ்டாலின்.

பாமக இன்னும் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் வராமலே தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் தேவையான பல்வேறு செயல் திட்டங்களை முன்வைத்துள்ளது. அன்புமணி நடுவண் அமைச்சராக இருந்த போது பல சாதனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு பரிந்துரைகளை பாமக அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் தான் தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு, ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களும் அழிக்கப்பட்டனர். தமிழக மண்ணும் அந்நியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆற்று நீறு, மலை வளம் என அனைத்தும் கொள்ளை போனது திமுக ஆட்சியில் தான். இப்படி பல அநீதிகளை திமுக செய்துள்ளது. திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்கும் ஒன்று சளைத்தது அல்ல. இந்நிலையில் திமுக பாமகவை குறை சொல்லும் தகுதியும் இழந்து நிற்கிறது. ஊழல் கட்சிகளான இந்த திராவிடக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்று பாமக அறைகூவல் விடுத்துள்ளது. திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சியைத் தான் தமிழக மக்களும் எதிர்பார்கின்றனர்.

வரும் தேர்தலில் இவ்விரு திராவிட கட்சிகளும் தமிழ் மண்ணை விட்டு அகல வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும். தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்தல் வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகள் சாதி மத கருத்தியல் பேதங்களை கடந்து ஒன்றிணைய வேண்டும். திமுக அதிமுக மற்றும் ஏனைய திராவிடக் கட்சிகளையும் வீழ்ந்த தமிழர்கள் தமிழ்க் கட்சிகளுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழர்களை சாதியை வைத்து பிரித்து மேயும் திராவிடக் கட்சிகளை நாம் துரத்துவோம். 
[vuukle-powerbar-top]

Recent Post