Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்கள் துக்கத்தில் இருக்க திராவிடக் குடும்பம் களிப்பில் மிதக்கிறது !! 

தமிழக அரசியலில் ஆதிக்கம் செய்யும்  திராவிட கூட்டத்தை பாருங்கள். தமிழகமே பல்வேறு இன்னல்களில் சிக்கி இருக்க திமுக வின் வருங்கால முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் சூதாட்ட கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறார்.  

தமிழகத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்ட நிலையில், தமிழக விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அண்டை மாநிலத்தை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போதாது என்று நடுவண் அரசு கொண்டு வரும் பல்வேறு நில அபகரிப்பு மற்றும் மக்கள் விரோத திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகிறார்கள். ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் அரசியல் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அரசால் பறிக்கப்பட்டு கொண்டு வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன. 

ஆனால் தமிழகம் ஏதோ மகிழ்ச்சிக் களிப்பில் இருப்பது போல இந்த திராவிடக் கூட்டங்கள்  சென்னை கிரிக்கெட் அணியின் விளையாட்டை கைதட்டி ரசித்து வேடிக்கை பார்ர்துக்கொண்டிருக்கிறது. இந்த சூதாட்ட கிரிக்கெட் விளையாட்டு என்பதே இளைஞர்களை மூளை சலவை செய்து மக்கள் பிரச்சனை குறித்து இளைஞர்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது தான். நடன மங்கையர்களை வைத்து இளம் தலைமுறையை மாய வலையில் சிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள். இப்படிப்பட்ட விளையாட்டை குடும்பத்துடன் ரசித்துக் கொண்டிருக்கிறது இந்த திராவிட குடும்பம். இவர்களை போன்றவர்கள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் வந்தால் தமிழகம் எத்தகைய நிலைக்கு தள்ளப்படும்? இவர்களை இளைஞர்கள் பின்பற்றினால் நாடு என்னவாகும்? 

தமிழகத்தில் தமிழர் அல்லாத திராவிடக் கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது, தமிழகத்தை ஆளும் உரிமையை பெறக் கூடாது என்று தமிழர்கள் எல்லாம் ஒன்றுகூடி வரும் வேளையில் இந்த திராவிடக் கூட்டம் , தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்று சொல்வது இனவாதம் என்று விகடனில் கட்டுரை எழுதுகிறது. இதை சில திராவிட சமூக ஆர்வலர்களை (?) வைத்து தமிழர்களுக்கு பாடம் நடத்துகிறது இந்த திராவிடத் தலைமைகள். திராவிடம் என்னும் தமிழினப்பகையை இன்னும் தமிழர்கள் நம்பினால் தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் தமிழர்கள் அந்நியர்களிடம் அடிமையாகவே இருக்க நேரிடும். 

இனியாவது திமுக மற்றும் ஏனைய திராவிட கட்சிகளையும், திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்க முன்வர வேண்டும். தமிழகத்தை தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் தமிழர்களே வழிநடத்த வேண்டும் அப்போது தான் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியும்.  அன்னியர் ஆட்சியில் இருந்து மீள முடியும். பிற தேசிய இனங்களை போல குறைந்த பட்ச உரிமைகளை பெற்று வாழ முடியும். 




[vuukle-powerbar-top]

Recent Post