Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூன் 21 பன்னாட்டு ஓக நாளில் தமிழர் ஓகக்கலையை மீட்போம் !

யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் வந்து அனைத்தும் எமது எனக் காட்டிக்கொண்டனர். நம்முடையவற்றை அழித்து, சமற்கிருதத்தில் தமது போலவே உருவாக்கிக்கொண்டனர். நமது நான்மறை நால், வேதமானது. நமது ஆயுள் நீட்டிப்பு மருந்து, ஆயுர்வேதமானது. நமது வானியல், வானசாத்திரமானது. நமது கணியம், சோதிடமானது. தமிழிசை, கருநாடக சங்கீதமானது. நடனம், நாட்டியமானது. பண், இராகமானது. வேதியல், வேதமானது. இன்னும் பலவற்றைச் சொல்ல முடியும். களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு  வல்லுனர் பெயரை நிறுவி, மொழி பெயர்த்து, தமது எனக் காட்டிக்கொள்வது ஆரியத்துக்கு பழகிய வேலை தான்.

தமிழ் இசையைத் திருடி, கருநாடக சங்கீதம் என்று திரித்தபடி, பெருவங்கியம் என்கிற இசைக் கருவியை நாதசுவரம் என்று பெயர் மாற்றித் திரித்தபடி, ஒருகட்பறையை – ஒரு+ கண்+ பறை –   தபேலா என வடமொழியில் பெயர் மாற்றியபடி, பதலை எனும் கருவியை தவில் என்று மாற்றியபடி, மத்தளம் அல்லது மதங்கம் கருவியை மிருதங்கம் என்று மாற்றியபடி,  சல்லரி கருவியை சால்ரா என்று மாற்றியபடி. தமிழ் இசையையே தியாகராச பாகவதர் இயற்றினார் என்று புளுகு மூட்டை அவிழ்த்துவிட்டபடி,  ஓக இருக்கைக்கும் பதஞ்சலி எனும் முனிவர்தான் தொகுத்தார் எனப் புரட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழர்கள் நாம் நம்முடைய ஓகக் கலையை ஆரிய மதத்தவர்களிடம்  இருந்து மீட்கவும், தமிழர்களுக்கு தமிழ் முறைப்படி ஓகக் கலையை பயிலவும் பான்னாட்டு ஓக நாளில் ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். இப்பயிலரங்கத்தில் அனைத்து விதமான ஓகக் கலைகளின் பெயர்களும் தமிழ் மொழியில் கற்றுத் தரப்படும். உடல் சார்ந்த ஓகம் மட்டுமின்றி மனத்தை நிலைப்படுத்தும் ஊழ்கம் (தியானம்) ஒளி நிலை ஊழ்கம் , மூச்சுப் பயிற்சி, தமிழர் உணவு முறை,  உயிரெழுத்து ஓகம் முதலிய பயிற்சிகளும், தமிழர் ஓக வரலாறு , தமிழர் மெய்யியல் குறித்த செய்தியையும் நாம் வழங்க உள்ளோம்.

இந்த நல்வாய்ப்பை தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி இந்த இலவச பயிலரங்கிற்கு குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஓகம் குருகுலம், தமிழர் பண்பாட்டு நடுவம்
இடம் : தமிழர் உலகம் 14, குகன் தெரு , காமகோடி நகர், வளரசரவக்கம் சென்னை 600087
வளசரவாக்கம் பஞ்சாயத்து போர்டு நிறுத்தம் கரூர் வைசிய வங்கிக்கு அருகாமை தெரு
[vuukle-powerbar-top]

Recent Post