Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்துடன் பெருவழுதி என்று பெயர் பொறிக்கப்பட்ட சங்க கால மோதிரம் கண்டுபிடிப்பு !

தமிழர்களுக்கு  அறிவு இல்லை, வரலாறு இல்லை, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்தும் ஆரிய திராவிடர்களே, இந்த செய்தியை பாருங்கள் ! இந்திய கண்டத்திலேயே முதன் முதலில்  எழுத்துக்களுடன்  நாணயம் வெளியிட்டது தமிழர்கள் தான் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. இப்போது தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து வெள்ளியை இறக்குமதி செய்து அதில் மோதிரம் முதலான அணிகலன்களை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது . புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பாண்டிய மன்னன் பெருவழுதியின் மீன் சின்னத்தையும் , பெயரையும் தமிழி எழுத்துருவில் பொறித்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் மோதிரம் உருவாகியுள்ளனர் தமிழர்கள். இந்த மோதிரத்தை தமிழ் வணிகர் ஒருவர் வைத்திருந்தார். இவரிடம் இருந்து மலையாள தொல் பொருள் ஆய்வாளர் பீனா என்பவர் வாங்கி இதில் உள்ள செய்தியை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவருக்கு நம் பாராட்டுகள்.

இந்திய தொல்லியல் துறையிடம்  இருந்து தமிழக தொல்லியல் துறை இந்த அரிய கண்டுபிடிப்பை  வாங்க வேண்டும். இப்படியான தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் பொருட்களை தமிழக அரசு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்து வரும் தமிழ் தலைமுறைக்கு காட்ட வேண்டும். அப்போது தான் தமிழின் தொன்மையும், தமிழர்களின் அறிவாற்றல் பற்றியும் இப்போதுள்ள தலைமுறை அறிந்து கொள்வார்கள் . இதற்கான முயற்சியை தமிழக அரசு செய்யுமா என்பது கேள்விக் குறி !!

[vuukle-powerbar-top]

Recent Post