Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் தமிழர் வாசகர் வட்டம் உருவாக்கம் ! 

தமிழ்த் தேசியம் தமிழகத்தில் எழுச்சி பெற்று திராவிடமும் ஆரியமும் தன்னுடைய ஆளுமையை இழக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆரிய திராவிட போர் நாடகம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. இப்போது ஆரியமும் திராவிடமும் தமிழர் அடையாளத்தை அழித்து தங்களுடைய அடையாளத்தை நிலைநிறுத்த துடிக்கின்றன. தமிழர்களை சாதியாகவும் மதமாகவும் பிரித்து வைத்து அரசியல் ஆளுமையை செய்கின்றன திராவிடமும் ஆரியமும். வழக்கம் போல அப்பாவித் தமிழர்கள் ஆரிய திராவிட சண்டையை வெளியில் இருந்து கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளது. இதனால் தமிழினத்திற்கு எந்த வகையிலும் பயனில்லை என்பதை தமிழ்த் தேசிய இனம் உணர்தல் வேண்டும். ஆரிய திராவிட சூழ்ச்சியில் இருந்து தமிழர்கள் வெளியேறி தமிழர்களாக இணைய தமிழர்களுக்கான கட்டமைப்பும், வாசகர் வட்டமும் உருவாக வேண்டும். அந்த வகையில் சென்னையில் தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தை நாம் உருவாக்க முனைந்துள்ளோம். இதற்கான முதல் கூட்டத்தை வரும் ஞாயிறு மாலை கூடுவதாக உள்ளோம். முகநூலில் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் இந்த வாசகர் வட்டத்திற்கு ஆதரவு தந்து தமிழர் அடையாளத்தை மீட்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தில் நாம் பேச உள்ள தலைப்புகள் 
தமிழர் மெய்யியல் 
தமிழர் வாழ்வியல் முறை 
தமிழர் ஒகக்கலைகள் 
தமிழர் வரலாறு பண்பாடு 
தமிழர் அரசியல் 
ஆகிய தலைப்புகளில் நாம் விவாதம் செய்வோம். சாதி, மத,கட்சி பேதங்கள் கடந்து எவ்வாறு தமிழர்கள் ஒன்றிணைந்து  தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவது , தமிழர் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்றவற்றை ஆய்வு செய்வோம். இந்த வாசகர் வட்டத்தில் இணைய விரும்பும் தமிழர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும். உங்கள் பெயர்களை பதிவு செய்யவும். வாழ்க தமிழ் !

[vuukle-powerbar-top]

Recent Post