Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி அரசின் வழிகாட்டுதலின்படி வடகிழக்கு மாநிலங்களில் இனப்பைடுகொலை நடத்த திட்டமிடுகிறதா இந்திய இராணுவம் ? 

அண்மையில் இந்திய அரசின் ஒப்புதலோடு மணிப்பூர், நாகலாந்து, பர்மா எல்லையில் நூறுக்கும் மேற்பட்ட விடுதலைப் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மணிப்பூர் நாகாலாந்து பகுதியில் ஏற்கனவே இராணுவ சிறப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் படி இராணுவம் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம். பொதுமக்களை கொன்றால் கூட இராணுவத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது . இதை எதிர்த்து தான் இரோம் சர்மிளா என்ற வீரமங்கை 15 ஆண்டுகளாக உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இந்திய இராணுவம் பர்மா எல்லையில் பதுங்கி இருந்த பல நூறு விடுதலைப் போராளிகளை ஒரே நாளில் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த படுகொலைக்கு மோடி அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. யார் இந்த விடுதலைப் போராளிகள், இவர்களின் கோரிக்கைகள் என்ன ? இவர்களோடு இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியதா ? இப்பகுதியல்  உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படுகிறதா என்ற எந்த செய்தியும் இந்திய அரசு இதுவரை ஊடகங்களில் வெளியிடவில்லை. ஈழத்தில் சிங்கள அரசு பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று சொல்லி ஒரு இனப்படுகொலையை நடத்தி உள்ளது. இதே போல இப்போது இந்திய ஊடகங்கள் இந்திய இராணுவ தாக்குதலை பயங்கரவாததிற்கு எதிரான போர் என்று முழங்கி வருகின்றன . இது மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வழிவகுக்கும். மனித உரிமைப் போராளிகள் இதை உடனடியாக தடுத்து நிறுத்த குரல் எழுப்ப வேண்டும். இல்லையெனில் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு முள்ளிவாய்க்கால் தோன்ற வாய்ப்புள்ளது .   
[vuukle-powerbar-top]

Recent Post