Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இனவெறியை தூண்டும்படியான பேச்சு.  வாட்டாள் நாகராஜுவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேகதாது அணையைக் கட்டவிடாமல் தமிழகம் முரண்டு பிடித்தால், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை அது திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கன்னட தீவிரவாத அமைப்பான சளுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

வட்டாள் நாகராஜுவின் பொறுப்பற்ற  இனைவேறிப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல பகுதிகள் தமிழர்களின் பூர்விக நிலங்களாகும். எல்லை சீரமைப்பின் போது பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் தமிழகம் இழந்து விட்டது. கர்நாடகாவில் ஒரு கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகத்தின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அங்குள்ள தமிழர்கள் யாரும் கன்னட தேசியத்திற்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அவர்கள் கன்னட மாநிலத்தின் குடிமக்களாகவே தங்களை கருதி கன்னட மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி தமிழர்கள் சுமூகமாக வாழ்ந்து வரும் நிலையில் வாட்டாள் நாகராஜ் தமிழ் கன்னட மக்களிடைய கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்கிறார். இரு இனங்களுக்கு இடைய சண்டையை உருவாக்கிட முயல்கிறார். இப்படியான செயலை கர்நாடக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். இனவெறியை தூண்டியுள்ள வாட்டாள் நாகராஜூ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளார்.


கர்நாடகாவில் தமிழர்களுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.  இப்போதும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசியுள்ள வட்டாள் நாகராஜுக்கு எதிராக கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இனியும் தாமதிக்காமல் இன வெறியை தூண்டிய வாட்டாள் நாகராஜுவை தேசிய பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கர்நாடக அரசுக்கும், இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

க. அதியமான்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
  
[vuukle-powerbar-top]

Recent Post