Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் வழிபாட்டிற்கு தடை எது ?

அண்மையில் நெல்லை சென்றிருந்த போது புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கும் சென்றேன். கோவிலின் கலைசிற்பங்களை ரசித்துக் கொண்டே முருகனின் சந்நிதிக்கும் சென்றேன். உலகில் எங்குமே காண முடியாது ஆறுமுகங்கள் கொண்ட முருகன் சிலையை இங்கு தான் காண முடிந்தது . சிறப்பான சிற்ப வேலைப்பாடு. தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை தமிழ்ச் சித்தர்கள் முருகனின் வடிவில் ஆழகாக காட்டியிருந்ததை காண முடிந்தது. ஆனால் நாம் வருத்தப்படக் கூடிய விடயம் என்னவென்றால் முருகனின் சந்நிதியில் தமிழில் வழிபாடு நடைபெறவில்லை என்பது தான். அங்கிருந்த பூசகர் சமஸ்கிருத மொழியில் மட்டுமே வழிபாடு செய்தார். தமிழ்க் கடவுளுக்கு சமஸ்கிருத மந்திரங்களா என்ற நியாயமான கோபம் நம்மிடம் எழுந்தது. பூசகர் நம்மிடம் திருநீறு கொடுத்ததும், நான் அவரிடம் ஐயா தமிழ்க் கடவுளுக்கு ஏன் சமஸ்கிருத மந்திரம் பாடுகிறீர்கள், அழகு தமிழில் முருகனுக்கு வழிபாடு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் . நீங்கள் தமிழில் வழிபாடு செய்வீர்களா என்று கேட்டேன். இப்படி கேட்டதும் அவர் நிச்சயமாக செய்யலாம் அதில் எந்த சிக்கலும் இல்லை என்றார் .

இதை தொடர்ந்து பூசகர் " ஏற மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று " என்ற திருப்புகழ் பாடலை அழகு தமிழில் பாடினார் . அதுமட்டுமில்லாமல் முருகன் சிலையை அருகில் இருந்து பார்வையிட அழைத்து அந்த சிற்பத்தின் பெருமையை நமக்கு விளக்கிக் கூறினார். நெல்லை கோவிலுக்குள் முருகன் வந்த வரலாற்றையும் கூறினார் பூசகர்.

கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய தடை வேறு யாருமில்லை தமிழர்கள் தான். இனி நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியது. எந்த கோவிலுக்கு சென்றாலும் தமிழில் தான் அருட்சினை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை நாம் பூசகருக்கு வைக்க வேண்டும் . தமிழர்கள் அனைவரும் இப்படி எல்லா கோவில்களிலும் செய்து வந்தால் தமிழர் கோவில்களில் அனைத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதப்படும். மேலும் சில காலங்கள் கழித்து ஆகமங்கள் பயின்ற தமிழ் சாதி மக்களே கோவில்களில் பூசராகவும் பணிபுரியும் நிலையம் வரும். தமிழர் ஆட்சி வரும் போது தமிழில் ஆறு கால பூசனை நடைபெற வேண்டும் என்ற சட்டமும் இயற்றப்படும். அதுவரை கோவில்களில் தமிழை வாழ வைப்பது நம் கடமை.

இந்த இணைப்பில் தமிழில் வழிபாடு குறித்த சிறப்பான தகவல்கள் இருக்கிறது. படியுங்கள் . http://siragu.com/?p=17049





[vuukle-powerbar-top]

Recent Post