Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தில்லியில் இருந்து ஒரு அழைப்பு ! 

ஐயா, நான் தில்லி வாழ் தமிழன்.  நடுவண் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறேன். தில்லியில் நாளை மோடியின் தலைமையில் சர்வதேச யோகா நாள் கொண்டாடுகிறோம். எங்கள் அலுவலகத்தின் சார்பில் 700 பேர் கலந்து கொள்கிறோம். இங்கு ஒரே யோகா குறித்த பெருமையை பேசுகிறார்கள். யோகா குறித்த செய்திகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என்றும், அது 'இந்தி'யர்களின் கலையென்றும், இதனால் வடமொழிக்கு பெருமை என்றும் இங்கு பேசுகிறார்கள். ஆனால் நீங்கள் போட்ட பதிவை பார்த்த பிறகு தான் ஓகம் என்பது தமிழர்கள் கலையென்றும், தமிழர்கள் தான் இக்கலையை உலகிற்கு வழங்கியுள்ளனர்  என்பதும் தெரியவந்தது. உண்மையில் ஓகம் என்பது தமிழர்களின் கலைதானா ? இது குறித்த வரலாற்று ஆதாரங்கள்  உள்ளனனவா ? என்று கேட்டார் தில்லி வாழ் தமிழர். 

தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழியென்றும், எல்லா மொழிகளுக்கும் தாய் என்றும் நமது பாவாணர் ஐயம் திரிபுமற உறுதி செய்துள்ளார். மேலும் சமஸ்கிருத மொழிக்கு எழுத்துருவம் கிடைப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் எழுத்துருவம் பெற்று விட்டது. தமிழ் எழுத்துருவத்தில் இருந்து தான் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் எழுத்துரு கிடைத்துள்ளது . தமிழர் சிற்பக்கலை, கோவில் கட்டடக் கலை , மொழி இலக்கணங்கள்  யாவும் தமிழில் இருந்து தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சென்றுள்ளது. தமிழ்ச் சித்தர்களின் உடல்வளர் கலையே ஓகம் என்பதாகும். இதை வடமொழியிலும் தமிழர்களே எழுதி உள்ளனர். மேலும் இன்று வடமொழியில் உள்ள பல்வேறு இலக்கியங்களும் முதலில் தமிழில் தான் எழுதப்பட்டது . தமிழர்களின் நான்மறையே ஆரியர்கள் வேதம் என்று திரித்தனர் . இதற்கான சான்றுகள் பாவாணர் தனது தமிழர் மத நூலில் எழுதியுள்ளார். ஓகக் கலையை பற்றியான பல சான்றுகள் நம் சித்தர் நூல்களிலும், சிற்பங்களிலும், கோவில்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. 

ஆகவே யார் கேட்டாலும் சொல்லுங்கள் ஓகக் கலை மட்டுமல்ல, இந்திய கண்டத்தில் தோன்றிய இசைக்கலை, தற்காப்புக் கலை, மருத்துவம், நடனம் போன்ற ஆய கலைகள் அனைத்தும் தமிழர்களின் கலைகளே. இந்த பதிலை கேட்ட தில்லி தமிழருக்கு அப்போது தான் நம் வரலாற்றின் மீது பெருத்த நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு இதுகுறித்து மேலதிக தகவல்கள்  அனுப்புங்கள் , நான் தில்லியில் உள்ள இந்தியர்களுக்கு நம் வரலாற்று பெருமைகளை கூறி அவர்களுக்கு புரியவைக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி அழைப்பை முடித்தார்.   

நாளை சூன் 21 ஞாயிறு காலை தமிழர் ஓகக் கலை குறித்த பயிலரங்கம் சென்னை வளரசவாக்கத்தில் நடைபெறுகிறது. 
 
[vuukle-powerbar-top]

Recent Post