Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தலைகவசத்தை கட்டாயமாக்கிய அரசு, காவல்துறை பணம் வாங்குவதையும் கட்டாயமாக தடை செய்தல் வேண்டும் !
பெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில் உடனடியாக எல்லோரும் தலைக்கவசம் அணியும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. பல நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பும் உள்ளது. வீட்டிற்கு குறைந்தது இரண்டு முதல் நான்கு தலைக்கவசங்கள் தேவைப்படும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. அரசு இப்போது கட்டாய தலைக்கவச ஆணையை நிறைவேற்றினாலும், பொதுமக்கள் அனைவரும் பல காரணங்களுக்காக தலைகவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பணம் பெரும் காணொளி காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து தான் அதிக அளவில் பணத்தை பெறுகிறார்கள். வாகன சோதனை என்ற பெயரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். சாலைகளில் பணியில் உள்ள காவல்துறையினரிடம் நூறு ரூபாய்க்கு (செலவுக்காக அவர்களின் சொந்த பணம்) மேல் எந்த நேரத்திலும் பணம் இருக்கக் கூடாது. மேலும் அபராதம் என்ற பெயரிலும் பணத்தை நேரடியாக காவல்துறை பெறுதல் கூடாது. அபராதத்திற்கான தொகையை கட்ட கால அவகாசம் கொடுத்து அதை நீதிமன்றத்தில் மட்டுமே கட்டும்படி காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்த வேண்டும். காவல்துறை மக்களிடம் இலஞ்சம் பெறுவதை இந்த நடவடிக்கை மூலமாக அரசு தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post