Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு !

தமிழர்களுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை , தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி , தமிழர்கள் காட்டுமிராண்டிகள் , சூத்திரர்கள், கீழானவர்கள் , அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை, தலைவராகும் தகுதியும் இல்லை, தமிழர்களை வேற்றின மக்களே ஆள வேண்டும் என்று தமிழர்களை இழிவு படுத்தி வரும் திராவிட ஆரிய பொய்க் கருத்தியல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம். தமிழர்கள் நாம் இழந்த வரலாற்றை மீட்போம் , பண்பாட்டை மீட்போம், கலைகளை மீட்போம் , இயற்கை வாழ்வியலை மீட்போம் , தமிழர் மெய்யியலை மீட்போம், தமிழர் அடையாளத்தை மீட்போம் இன்னும் இழந்த அனைத்தையும் மீட்போம் என்று உறுதியேற்று இந்த வாசகர் வட்டத்தில் இணைய தமிழர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.


தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தில் நாம் பேச உள்ள தலைப்புகள் ...

தமிழ் மொழி வரலாறு
தமிழர் மெய்யியல்
தமிழர் வாழ்வியல் முறை
தமிழர் மருத்துவம்
தமிழர் ஒகக்கலைகள்
தமிழர் வரலாறு, பண்பாடு
தமிழர் அரசியல்
தமிழினப் பகையான ஆரிய திராவிட சூழ்ச்சி அரசியல்.

ஆகிய தலைப்புகளில் நாம் விவாதம் செய்வோம். சாதி, மத,கட்சி பேதங்கள் கடந்து எவ்வாறு தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவது , தமிழர் அடையாளத்தை மீட்டெடுப்பது போன்றவற்றை இக்கூட்டத்தில் ஆய்வு செய்வோம். இந்த வாசகர் வட்டத்தில் இணைய விரும்பும் தமிழர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும்.

திராவிடம்  என்பது தமிழர் அல்லாதவர்கள் இம்மண்ணில் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கப்பட்டது தான். - அண்ணன் சீமான்.

ஆனால் திராவிடத்தை உருவாக்கிய ஈவேரா தமிழர்களின் போற்றத்தக்க வழிகாட்டி - இதுவும் அண்ணன் சீமான் தான்.

தமிழில் இருந்து வடமொழி சென்ற சொற்கள் . இப்படி பல்லாயிரம் சொற்கள் தமிழில் இருந்து வடமொழி சென்றுள்ளது .
1. வயம்/ வயது/ வயசு வயசு சமஸ்கிருதம் அகவை, வயம் - வல்லமை, ஈர்ப்புத் தன்மை, வசீகரம்
2. மனம்/மனது/மனசு மனசு சமஸ்கிருதம் மனம் - நிலைபெறும் தன்மை கொண்ட ஒன்று.
3. கோடி கோடி சமஸ்கிருதம்
4. வார்த்தை வார்த்தை சமஸ்கிருதம் சொல்
5. அருத்தம் அர்த்த சமஸ்கிருதம் பொருள். பிங்கல நிகண்டு - பொன்(பொருள்). சூடாமணி நிகண்டு - சொற்பொருள்.
6. வாக்கியம் வாக்கியா சமஸ்கிருதம் வாக்கியம்(வாக்கு+இயம்), சொற்றொடர்
7. பதி பதி சமஸ்கிருதம் இடம், தலைவன்
8. அதி அதி சமஸ்கிருதம் ஆதியிலிருந்து அதிகரிக்கும் செயல் அதி என்றும் மீதியிலிருந்து குறைக்கும் செயல் மிதி என்றும் வழங்கப்படும்.
9. அதிகம் அதிகா சமஸ்கிருதம் .
10. ஆலயம் - ஆலயா சமஸ்கிருதம்
[vuukle-powerbar-top]

Recent Post