Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நண்பரின் திருமணத்திற்கு செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் சவ்வாது மலைத்தொடருக்கு ஒரு பயணம் !

நேற்று நம் முகநூல் நண்பரும் தமிழ் உணர்வாளருமான திரு.கணேசு எழுமலை அவர்களின் திருமண வரவேற்புக்கு குடும்பத்துடன் சென்றோம். அவருடைய திருமண நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அவரது இல்லற வாழ்க்கை சிறக்க வாழ்த்தினோம். நண்பரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

போளூர் வரை செல்ல வேண்டிய சூழலில், போகும் வழியில் உள்ள தமிழகத்தின் இயற்கை வளங்களையும் பார்வையிட வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன் படி போளூர் செல்வதற்கு வேலூர் வழியாக செல்ல தீர்மானித்தோம். வேலூர் திருவண்ணாமலை மாவட்டத்தின் இடையே உள்ள சவ்வாது மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள அமிர்தி என்ற இடத்தை தேர்வு செய்து அங்கு பயணித்தோம். அமிர்தி என்னும் மலை அடிவாரப் பகுதியில் தமிழக அரசின் உயிரியல் பூங்கா உள்ளது. மேலும் மலையின் மீது பயணிக்க சாலையும் சுமார் 40 கிமீ வரை உள்ளது . வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலை வழியாக மலையின் மீது பயணிக்கலாம் . போகும் வழியில் உள்ள வனப்பகுதிகளை ரசிக்கலாம். அமிர்தி வனப்பகுதிக்கு செல்லும் வழியெங்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் செழுமை தான். மக்கள் பெரும்பாலும் இங்கு வேளாண்மை செய்கிறார்கள். அமிர்தி பகுதிக்கு மலையில் இருந்து ஒரு ஆறு வருகிறது . தற்போது இந்த ஆற்றில் நீர் வரத்து குறைவாகத் தான் உள்ளது என்றால் இந்த ஆற்றின் வழியெங்கும் பசுமை நிறைந்த அடர்ந்த காடுகளை காண முடிந்தது. நேரம் இருந்தால் இந்த ஆறு தொடங்கும் மலை அடிவாரம் வரை நாம்  ஆற்றின் வழியே செல்லலாம். பல வகையான மரங்களும், மூலிகை செடிகளும், பட்டாம்பூச்சிகளும், சிறிய வகை குரங்குகளும் , விலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. இருப்பினும் மனிதன் கால்தடம் பட்ட இடமெல்லாம் நெகிழிக் குப்பைகளும், துணிகளும், மனித எச்சங்களும் இயற்கையை சீரழிக்கிறது. மனிதர்கள் மட்டுமே இப்படியான பொருட்பற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இயற்கையை காக்கத் தவறுகிறார்கள். அதனால் எந்த காடுகளுக்கு சென்றாலும் கூரியமட்டும் காடுகளின் எந்த குப்பைகளும் போடாமல் திரும்ப வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும். இயற்கையை விரும்பும்  சுற்றுலா பயணிகளை சவ்வாது மலைத் தொடர் நிச்சயம் ஏமாற்றம் அளிக்காது.  
[vuukle-powerbar-top]

Recent Post