Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உடலுக்கு ஆபத்தான மேகி நூடுல்ஸ் என்னும் உணவுப் பண்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக தடை செய்ததை நாம் வரவேற்கிறோம். இது போல பல ஆபத்தான பன்னாட்டு பெருநிறுவன தின்பண்டங்களையும் அரசு ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் நுகர்வோர் விழிப்புணர்வுக்காக தமிழ் மொழியிலும் திண்பண்டங்கள் குறித்த தகவல்களை வழங்க அரசு உத்தரவிட வேண்டும். 

தமிழகத்தில் விற்கப்படும் கோடிக்கணக்கான பண்டங்களில் தமிழ் மொழி இடம்பெறுவதே கிடையாது. மருந்து மாத்திரைகள் உட்பட தமிழகத்தில் விற்கப்படும் பொருட்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தகவல்கள் உள்ளதை நாம் பார்க்க இயலும். இலங்கையில் கூட விலைப் பொருட்கள் அனைத்திலும் தமிழ் மொழியில் உள்ளன. ஆனால் தமிழர்களின் தாய் நாடான தமிழகத்தில் தமிழ் மொழியில் எந்த பொருட்களும் விற்கப்படுவதில்லை. இதனால் தமிழ் மட்டுமே நன்கு அறிந்துள்ள தமிழர்களுக்கு பொருட்களின் பெயர்களோ , அல்லது பொருட்கள் குறித்த விவரங்கள் பற்றியோ அறியமுடிவதில்லை. மேகி போன்ற நச்சு பண்டங்களில் என்ன உள்ளது என்பதை தமிழில் எழுதினால் அது தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் . ஒவ்வொரு மாநிலத்திலும் விற்கப்படும் பொருட்களில் அந்தந்த மாநில மொழிகளில் தகவல் இடம்பெற வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் விற்கப்படும் அனைத்து விதமான பொருட்களிலும் தமிழில் தகவல் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இது நுகர்வோரின் அடிப்படை உருமையாகும் . தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்குமா ? 
[vuukle-powerbar-top]

Recent Post