Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று சன் தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தூய தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே திரைபடங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டுமா? திரைபடத்தின் உள்ளடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா? எதற்கு வரி விலக்கு கொடுக்கலாம் , எவைக்கு தேவையில்லை என்பதை பற்றிய விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தணிக்கைத்துறையில் பங்காற்றி வரும் எஸ். வீ, சேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் மனுசபுத்திரன் ஆகியோருடன் நானும் விவாதத்தில் கலந்து கொண்டேன்.

என்னுடைய பரிந்துரையை அரசுக்கும் வைத்துள்ளேன். தொலைகாட்சியில் கூறியுள்ளேன். எல்லாப் படங்களுக்கும் வரி விலக்கு கிடைத்தால் அதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் அது தமிழ் இனத்திற்கு பயனுள்ளதாக இருக்காது என்பதே நம் வாதம். நம் மொழி, இனம், மண், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை பிரதிபலிக்கும் படங்களுக்கே வரிவிலக்கு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்பதே நம் கருத்தாக அமைந்தது. இந்த விவாதமேடை நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பு ஆகிறது.

தமிழ்ப் திரைப்படங்களில் எவைக்கு வரிவிலக்கு அளிக்கலாம் .

௧. தூய தமிழில் பெயர் வைத்துள்ள படங்கள். கதாபாத்திரங்கள் தூய தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கும் படங்கள்.  
௨. தமிழர் பண்பாட்டை, கலைகளை, வரலாற்றை பறைசாற்றும் படங்கள்
௩. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் படங்கள்
௪. ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் அதிகம் கலக்காத வசனங்கள் பாடல்கள் இடம்பெற்றுள்ள படங்கள்
௫. சாதி மத காழ்ப்புணர்வு காட்டாது தமிழர்களின் ஒற்றுமையை பேணும் படங்கள்.
௬. ஆபாசம் வன்முறை காட்சிகள் இடம்பெறாத படங்கள்
௭. திருக்குறளை பற்றி பேசும் படங்கள்.
௮. குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை, சமூக அக்கறையை விதைக்கும் படங்கள்.
௯. மது ஒழிப்பு, இலஞ்சம் ஒழிப்பு , மரம் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, நீர் சேகரிப்பு, மண் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், தாய் மொழிக் கல்வி  போன்ற நற் கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்கள்.
௧௦. தமிழ் மொழி, தமிழ் மண் , தமிழினத்தை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்களுக்கும் வரி விலக்கு.
௧௧. தமிழுக்கு, தமிழினத்தின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட்ட தமிழர்களை பற்றியான  படங்களுக்கு  வரி விலக்கு.


[vuukle-powerbar-top]

Recent Post