Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் தமிழர் வாசகர் வட்டம் - முதல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.

நாளை 07-06-2015 ஞாயிறு மாலை சென்னையில் நடக்கவுள்ள தமிழ் தமிழர் வாசகர் வட்டத்திற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம். தமிழர்களின் வரலாற்றை, தனித்துவத்தை, அடையாளத்தை மீட்க இப்படியான செயல்பாடுகள் காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த வாசகர் வட்டத்திற்கு வருகை தரும் நண்பர்களுக்கு சில நல்ல செய்திகளும் உள்ளன.

நிகழ்ச்சி நிரல் - தலைப்புகள்

தமிழர்களின் அரசியல் எழுச்சி - அதியமான்
தமிழர் மெய்யியல் அறிமுகம் - இராச்குமார் பழனிசாமி
தமிழர் வாழ்வியல் நெறி - அசித்தர்
தமிழர் உணவு முறை மற்றும் மருத்துவம் - ஜலீல் அலீம்
திராவிடத் தெலுங்கர்களின் அரசியல் கட்டமைப்பு மற்றும் ஆளுமை - சீதையின் மைந்தன்
திராவிடர்களின் சாதி ஒழிப்பு நாடகம் பின்னணி - பாரிசாலன்

போன்ற தலைப்புகளின் கீழ் நாம் பேச உள்ளோம். மேலும் சில போட்டிகளும் வைக்க உள்ளோம். சிறு தலைப்பின் கீழ் பேசுதல், திருக்குறள் தமிழர் வரலாறு குறித்த வினா-விடை, பிழையற தமிழை எழுதுதல் போன்ற போட்டிகள் வைத்து பரிசும் கொடுக்க உள்ளோம். இந்த நல்வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்த தமிழ் தமிழர் வாசகர் வட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக தமிழ் மாணவர்கள் இதில் இணையுமாறு வேண்டுகோள் வைக்கிறோம். தொடர்புக்கு 9566224027


[vuukle-powerbar-top]

Recent Post