Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் யார் என்று தீர்மானிக்க வேண்டியது தமிழர்கள் தானே தவிர ஆரியனும் திராவிடனும் அல்ல !

அண்மையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டில் யார் தமிழன் என்று பேசியுள்ளார் ஒரு இந்துத்வாவாதி. இவரது கருத்துப்படி தினந்தோறும் குளிப்பவன், பசுமாட்டை வழிபடுபவன், இந்து மதத்தை தழுவியவன்  தான் தமிழன். இவ்வாறு இந்துத்வாவிற்கு அமைய சில வரைமுறைகளை வகுத்துள்ளனர் இந்து முன்னணி கட்சியினர்.

இது போலவே மதியில்லாத திராவிட மதத்தை சேர்ந்த ஒருவர் தமிழன் யார் என்று தமிழனுக்கு காட்டிக் கொடுத்தது ஈவேரா என்று அண்டப் புழுகை புழுகியுள்ளார். மேலும் கடவுளை வணங்காதவர், மாட்டுக் கறி உண்பவர், தமிழர் பண்பாட்டையும், தமிழ் மொழியையும் மதிக்காதவர் தான் தமிழர் என்றும் திராவிட மதத்தை சார்ந்தவர்கள் கூறிவருகிறார்கள்.

நாம் கேட்கிறோம். தமிழர் யார் என்று தீர்மானிக்க தமிழர் அல்லாத ஆரிய திராவிடர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? நீங்கள் யார் எங்களுக்கு வரையறை வகுக்க ?  தமிழ் மொழியை, தமிழ் மண்ணை, தமிழினத்தை, தமிழர் வரலாற்றை, தமிழர் மெய்யியலை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத, தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை நாம் தமிழர் என்கிறோம். ஆனால் தமிழர்களுக்கு அந்நியமான ஆரிய திராவிட கருத்தியல் கொண்டவர்கள் தமிழர்கள் யார் என்று தமிழர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். போதும், இனி உங்களது பாடங்களை படிக்கும் நிலையில் நாங்கள் இல்லை . உங்கள் பாடத்தை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் இப்போது விழித்துக் கொண்டனர்.


[vuukle-powerbar-top]

Recent Post