Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எட்டாம் வகுப்பு பாடத்தில் 'இந்தி' இந்தியாவின் தேசிய மொழி என்ற தவறான செய்தியை நீக்கக் கோரிக்கை !
2015-16 கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசிய மொழி எது என்ற கேள்வி கேட்கப்பட்டு அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பாடநூல். மாணவர்கள் அனைவரையும் இந்தி என்ற பதிலையே தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தி உள்ளனர். இது மிகத் தவறான திட்டமிட்ட இந்திக்கு ஆதரவான செயலாகும். இந்தக் கேள்வி தேசிய ஒருமைப்பாடு என்ற பாடப்பிரிவின் கீழ் வருகிறது . ஆனால் இப்பாடத்தில் எங்கும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பாடத்தின் இறுதியில் வரும் கேள்வியில் எது இந்தியாவின் தேசிய மொழி என்று கேட்டு மாணவர்களை குழப்பியுள்ளனர் இப்பாடத்திட்டத்தை வகுத்தவர்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி  இந்தியாவிற்கு என்று அறிவிக்கப்பட்ட ஒரு தேசிய  மொழி கிடையாது. இந்தியும் ஆங்கிலமும் இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே.
தமிழக அரசு உடனடியாக இந்த பிழையான செய்தியை தமிழக அரசின் சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு பாடத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்தியாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட தேசிய மொழி கிடையாது என்ற செய்தியை மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும் . அனைத்து தமிழகப் பள்ளிகளுக்கும் இது குறித்த விளக்கத்துடன் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பவும் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் முன்வைக்கிறது.

நன்றி
இராச்குமார் பழனிசாமி
தமிழர் பண்பாட்டு நடுவம்



[vuukle-powerbar-top]

Recent Post