Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர்மாற்ற தமுக போராட்டம் ! 

4/07/2015 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மூத்த தமிழ்த் தேசியவாதியாக ஐயா அருகோ, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியர், தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பாக இராச்குமார்  பழனிசாமி , கச்சதீவு மீட்பு இயக்கத்தின் தலைவர் சீதையின் மைந்தன் மற்றும் பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். 

மதராஸ் மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பிறகு மலையாளிகள் கேரளாவில் மலையாளிகளுக்கு நடிகர் சங்கம் தொடங்கினர். தெலுங்கர்கள் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கம் தொடங்கினர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழர் நடிகர் சங்கம் உருவாகாமல் தென்னிந்திய நடிகர் சங்கமாக செயல்பட வைத்தனர் தமிழர் அல்லாத வேற்றின நடிகர்கள். இதனால் தமிழ்த் திரையுலகில் வேற்றின மக்கள் ஆதிக்கம் செலுத்தி தமிழக அரசியலையும் வணிகத்தையும் கைப்பற்றி விட்டனர் தெலுங்கர்கள் என்று கூறினார் எழுகதிர் ஆசிரியர் அருகோ ஐயா . 

தமிழகத்தில் மூன்று முக்கியமான இடங்களை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும். ஒன்று, தமிழ்த் திரைப்படத்துறை, இரண்டு தமிழக ஊடகத்துறை , மூன்று தமிழக அரசியல் . இந்த மூன்றையும் தமிழர்கள் கைப்பற்றாதவரை தமிழர்களுக்கு தமிழகத்தில் விடிவு இல்லை என்று கூறினார் சீதையின் மைந்தன் . 

தமிழ்த் திரையுலகில் தமிழர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகிறது . தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது . இந்த மண்ணின் மனம் சார்ந்த படங்களும், உரிமை சார்ந்த படங்களும் வெளிவருவதில்லை. தமிழர்களின் குரல் வெளிய வருவதுமில்லை. மேலும் தமிழர் அல்லாதவர்கள் தங்களது அடையாளத்தை மறைத்து தமிழ் திரையுலகில் வாழ்ந்து வருகிறார்கள் . தமிழர் அல்லாதவர்கள் தங்களது இனக்குழுவின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் . விசால் ரெட்டி தனது அடையாளத்தை மறைத்ததால் இன்னும் சிலர் விசால் ரெட்டி எனும் நடிகரை தமிழர் என்றே நினைத்து ஏமாறுகின்றனர் . இந்த நிலையை மாற்றிட தமிழர் அல்லாதவர்கள் தங்களது உண்மையான இனக்குழு அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தமுக தலைவர் அதியமான் கூறினார். மேலும் நடிகர் சங்க ஆவணத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும். தமிழர் அல்லாதவர்கள் நடிகர் சங்கத்தில் தலைமை பொறுப்புக்கு வரமுடியாதவாறு திருத்தும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார் . 

திரைப்படத்துறையின் மூலமாகத் தான் தமிழர் அல்லாதவர்கள் புகழ்பெற்று பின்னர் அரசியலை கைப்பற்றுகின்றனர் , பிறகு தாங்கள் தான் தமிழர்களுக்கு போராடுவதாக கூறிக்கொண்டு தமிழர்களுக்கு சாதி வெறிப் பட்டதை கொடுத்து தமிழர்களை அரசியலில் ஓரம்கட்டுகின்றனர் தெலுங்கர்கள் என்று கூறினார் செல்வாபாண்டியர்.  

இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தால் தமிழர்கள் விழிப்படைய வேண்டும். தமிழ்த் திரையுலகில் தமிழர்களே முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும். திரைத்துறை தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேற்றின மக்கள் இங்கு வேலை செய்யலாம் , சம்பாதிக்கலாம் , ஆனால் தலைவர் பொறுப்புகளுக்கு வரக் கூடாது , மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு அவர்கள் வழிவிட்டு ஒதுங்கு நிற்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் செய்தியாகும். 





[vuukle-powerbar-top]

Recent Post