Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை பெருநகர தொடர்வண்டி (சென்னை மெட்ரோ)  நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை நீக்க கோரிக்கை !

அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சென்னை பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே. இந்த தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் இரு மொழிக் கொள்கை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவது தமிழர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாகும். தமிழர்களுக்கு தமிழ் மொழியிலும் தமிழர் அல்லாத வெளியாட்களுக்கு ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளது. உலகில் உள்ள பல நாடுகளிலும் இத்தகைய தாய் மொழி மற்றும் அயல்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள நிறுத்தங்களின் பெயர்கள் இந்தியிலும் உள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது . இது தமிழக அரசின் மொழிக் கொள்கையை மீறுவதாகவும் உள்ளது. தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். நடுவண் அரசுடன் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தை அலுவல் மொழியாக பயன்படுத்துகிறது. அதனால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தமிழ்நாடு அரசின் சேவைகளில் பயன்படுத்துதல் வேண்டும். இந்தி இங்கு அவசியமில்லை.

தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் இந்திக்கும்  ஆங்கிலத்திற்கும் மட்டுமே இடமளிக்கப்படுகிறது. அங்கு தமிழுக்கு எந்த இடமும் இல்லை. இந்தி மாநிலங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை. தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற 60 ஆண்டு கோரிக்கையை இன்னும் இந்திய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் இந்திய அரசு இந்தியை எல்லா இடங்களிலும் திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனமும் இந்தியை தமிழ் மக்களின் மீது திணிப்பது எந்த வகையிலும் தமிழர்கள் ஏற்க இயலாது.

தமிழக அரசின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப, 1976 இந்திய அலுவல் மொழி சட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என்பதையும் கருத்தில் கொண்டு பெருநகர தொடர்வண்டி நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை உடனே சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவனம் அகற்ற வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது. இந்த மொழியுரிமைக் கோரிக்கை நிறைவேற தமிழகக் கட்சிகள் அனைத்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இராச்குமார் பழனிசாமி
செயலாளர்
தமிழர் பண்பாட்டு நடுவம்




சென்னை பெருநகர தொடர்வண்டியில் பயணித்த ஒருவரை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கின்றோம் !

பெருநகர தொடர்வண்டி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இதில் பயணிக்கலாம். இன்று திராவிட முன்னேற்ற கழக முக்கிய பொறுப்பாளரான ஸ்டாலின் தொடர்வண்டியில் பயணம் செய்த போது அருகில் உள்ள சக பயணியை அடித்து அங்கிருந்து விலகி செல்ல மிரட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலேயே ஸ்டாலின் இப்படியான திமிர் போக்கை கடைப்பிடித்துள்ளார். எல்லோரையும் சமமாக எண்ணாமல், வாக்களிக்கும் குடியுரிமை பெற்றவரை இப்படி பொதுவெளியில் கீழ்த்தரமாக நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இத்தகைய அராஜக செயலுக்கு திமுக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.









[vuukle-powerbar-top]

Recent Post