Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினத்தை சேர்ந்த சாதிப் பற்றாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் ! நீங்கள் சாதியை வளர்க்கவில்லை, இங்கு திராவிடத்தை வளர்க்கிறீர்கள் !!

தமிழ்ச் சாதிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று எவரும் இல்லை. தமிழ்ச் சாதிகளில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த தேசிய இனத்தில் உள்ள சாதிகளிலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது இல்லை. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் ஒப்பற்ற ஆசானான திருவள்ளுவர் கூறிவிட்டார். சாதிகள் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. அது செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவானது. இருப்பினும் செய்யும் தொழில்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை . இதில் எந்த சிறப்பும் இல்லை என்பதை தான் வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்ற குரலின் மூலமாக உலகிற்கு போதிக்கிறார். இப்படி இருந்தும் தமிழ்நாட்டு மக்களை சாதி என்னும் தொழில் வேற்றுமையை தனக்கு சாதகமாக்கி தமிழினத்தை அடிமைப்படுத்தியது ஆரியமும் திராவிடமும் . ஆரியர்களும் திராவிடர்களும் தமிழர் அல்லாதவர்கள். வெளியில் இருந்து தமிழகம் நோக்கி வந்தவர்கள். வந்தவர்கள் தாங்கள் இங்கு செழித்து வாழவேண்டும் என்பதற்காக தமிழர்களிடையே சாதி பேதத்தை வளர்த்தனர். ஏற்றத் தாழ்வுகளை கற்பித்தனர். தமிழர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒன்றிணையக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தனர். தமிழகத்தில் உள்ள திராவிடக் இனக்குழுக்கள் சண்டையிட்டு நாம் பார்த்தது உண்டா?  அவர்கள் தங்களுக்குள் மோதாமல் தமிழர்களிடையே மட்டும் மோதலை உருவாக்கி குளிர் காய்கிறார்கள் திராவிடர்கள். தமிழகத்தில் எத்தனையோ கொலைகள் , கொள்ளைகள், குற்றங்கள்  நடந்தாலும் அதில் சில சாதியின் காரணமாகவும் நடைபெறுகிறது என்பது வேதனையான விடயம். இப்படியான சூழ்நிலையை பயன்படுத்தி கீழ்சாதி மேல்சாதி என்ற தவறான சாதி  படிநிலையை காட்டி விட்டு சாதி மோதலை உருவாக்கி விடுகின்றனர்  இனப்பகைவர்கள். தமிழ்ச் சாதிகளுக்குள் வேற்றுமையில்லை என்பதை திராவிட ஆரிய மதத்தினர் ஒருபோதும் கூறமாட்டார்கள். ஒருவனை ஆதிக்க சாதியென்றும் மற்றொருவனை கீழ்சாதி என்றும் முத்திரை குத்தி சாதி மோதலை அதிகமாக தூண்டி விடுபவர்கள் தான் இந்த திராவிட மத வெறியர்கள். தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழர்களுக்கு பண்பாடு இல்லை என்றும் தொடர் பரப்புரையில் ஈடுபடுகின்றனர் திராவிட மத வெறியர்கள். இவர்களது தலைவன் அவ்வாறான பாடத்தை இவர்களுக்கு புகுத்திவிட்டு சென்றுள்ளான். தலைவன் வழியிலேயே சென்று இன்னும் இந்த மதத்தை சேர்ந்த பக்தர்கள் தமிழர்களை ஒன்றிணைய விடாமல் சாதி பிணக்கத்தை அதிகப்படுத்த சாதி ஒழிப்பு நாடகப் போராட்டம், மனித சங்கிலி என்ற பல்வேறு உத்திகளை கையாளுகின்றனர் தமிழின எதிரிகள்.

இந்த உண்மையை உணராத தமிழ்ச் சாதிகள் ஆரிய திராவிட சூழ்ச்சியை அறியாமல் தாங்களாகவே இவர்கள் விரித்த வலையில் வீழ்கின்றனர். முதலில் தமிழர்கள் உணரவேண்டியது . தமிழ்ச் சாதிகளுக்குள் பிறப்பின் அடிப்படையிலோ தொழிலின் அடிப்படையிலோ உயர்ந்தோர்  தாழ்ந்தோர் இல்லை என்பதாகும். அடுத்து தமிழ்ச் சாதி பற்றாளர்கள் உணரவேண்டியது, தமிழர்களுக்குள் சாதி பிணக்கத்தை அதிகப்படுத்தும் திராவிட ஆரிய மதத்தின் சூழ்ச்சியை. இந்த இரண்டு முக்கியமான கருத்துக்களை தமிழ்ச் சாதிகள் கட்டாயம் உணர்தல் வேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல தமிழ்ச் சாதிகளுக்குள் மோதல் ஏற்பட்டால் ஆரிய திராவிட கருதியலாளர்களுக்கு கொண்டாட்டம் தான் . இதை வைத்துக் கொண்டு இவர்கள் தங்கள் கட்சியை , இயக்கத்தை கட்டமைத்து விடுவார்கள் . நாமும் இவர்களுக்கு அடிமையாகவே இருக்க நேரிடும்.

இனியும் தமிழர்கள் ஆரியமும் திராவிடமும் இம்மண்ணில் வளர இடமளிக்கக் கூடாது. நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய நல்லறத்தை கடைப்பிடித்து சாதிய ஏற்றத் தாழ்வு என்ற மாயையில் இருந்து மீண்டு வெளியே வருதல் வேண்டும். இப்படியான ஏற்றத் தாழ்வுகள் ஒருபோதும் நம்மிடம் இருந்தது இல்லை. இவை அனைத்தும் நம்மை அடிமைப்படுத்திய திராவிட ஆரிய மக்களால் தான் நம்மிடையே புகுத்தப்பட்டது என்பதை இனியாவது தமிழ்ச் சாதிகள் உணர்தல் வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் என்பதை ஒவ்வொரு தமிழினக் குழுவும் உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும். சாதியின் பெயரால் இனியும் ஒரு கொலையோ குற்றமோ தமிழகத்தில் நடக்கக் கூடாது என்பதை நாம் அனைவரும் உறுதிப்படுத்துவோம். அவ்வாறு ஒரு குற்றம் நடப்பின் அது நம் இனப்பகைவர்களுக்கு தான் சாதகமாக அமையுமே தவிர ஒருபோதும் நம் இனத்திற்கு சாதகமாக அமையாது. இந்த செய்தியை முடிந்தவரை தமிழர்கள் தாங்கள் சார்ந்த தமிழினக் குழுக்களிடையே பரப்புங்கள் .



[vuukle-powerbar-top]

Recent Post