Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கேள்வி :
நாம் தமிழர் கட்சி மாநாட்டில் சீமான் அவர்கள் ‘பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் போன்றோரை நான் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறேன். சிங்காரவேலர், அயோத்திதாசர், பிரபாகரன் ஆகியோரைத் தான் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும்‘ என்று ஒரு அளவுகோல் வைக்கின்றார் இதை எப்படி பார்க்கின்றீர்கள்?
# தோழர் தொல். திருமாவளவன்:
“தமிழர்கள் - தூயத்தமிழர்கள் என்றுபேசுகின்ற தூய்மைவாதம் இனத் தூய்மைவாதம். இந்த இனத் தூய்மைவாதம் மிகவும்ஆபத்தானது. இனத் தூய்மை சரி என்றால் சாதித் தூய்மையும் சரி. உடல்நலம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது வேறு.ஆனால் இனம் தூய்மையாக இருக்க வேண்டும் சாதி தூய்மையாக இருக்க வேண்டும் என்பது மிக ஆபத்தானது.உலக இயற்கையில் கலப்பு தான் இனப்பெருக்கத்திற்கு அடிப்படையானது. கலப்பு தான் எல்லாவிதமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் முற்போக்குக்கும் அடிப்படையானது. இனம் கலக்க வேண்டும் - மொழி கலக்க வேண்டும் - சாதி கலக்கவேண்டும் - பண்பாடு கலக்க வேண்டும். இவையெல்லாம் கலந்துதான் புதிய புதிய உற்பத்திகள் உருவாகிறது. மேம்பாடு என்பது அப்படித்தான்.இனத்தூய்மைவாதம் பேசினால் ஹிட்லர் செய்தது சரி என்றாகிவிடும். இங்கே மருத்துவர் ராமதாசு பேசும் சாதித் தூய்மைவாதமும் சரி என்றாகிவிடும். கவுரவக் கொலைகள் சரி என்றாகிவிடும். கவுரவக் கொலைகள் ஏன் நடக்கின்றது. சாதி கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் நடக்கின்றது. சாதித் தூய்மைவாதம் தானே இது. பிறகு சாதித் தூய்மைவாதத்தை நாம் ஏற்றுக்கொள்வது போன்று ஆகிவிடும்.உலகத்தில் எந்த இனமும் தூய்மையாக இருக்கவே முடியாது. இது இயற்கை இயங்கியலுக்கே எதிரானது.
(04.07.2015 அன்று ஓளிபரப்பான இமயம் டிவியின் ‘நேர்முகம்‘ நிகழ்சியிலிருந்து)- பரிமளராசன்
‪#‎தீக்கதிர்‬

[vuukle-powerbar-top]

Recent Post