Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்த தமிழக அரசு ஏன் தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கொண்டு வரவில்லை ?

அரசு பள்ளிகளின் மூலமாகத் தான் தமிழ் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது. அரசு பள்ளி மாணவர்கள் தான் பல உயர்ந்த பதிவிகளுகும் வந்துள்ளனர். தமிழ் வழியில் படித்த பல அறிஞர்கள் நாட்டில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள் தான். இருப்பினும் தமிழ் வழியில் பிள்ளைகளை சேர்க்க ஏழை குடும்பங்கள் கூட இப்போது அணியமாக இல்லை என்பது வேதனையான விடயம். அப்படியே தமிழ் வழியில் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்பினாலும் தமிழ் வழிக் கல்வியை அளிக்க அரசு பள்ளிகளை விட்டால் வேறு வழியில்லை. அரசு பள்ளிகளோ அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி உள்ளன. இதனால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழா அரசும் தரமான கல்விக் கூடங்களை உருவாக்க முயற்சி செய்வதுமில்லை. மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்ட தமிழக அரசு , மாநில அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி தமிழ் வழிக் கல்விக்கு மூடு விழா கண்டது. இதை கண்டித்து தமிழ் அமைப்புகளும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அருகாமைப் பள்ளி, தாய்மொழிக் கல்வி , இலவசக் கல்வி என்ற அடிப்படை உரிமையை ஒவ்வொரு குடிமகனும் பெறவேண்டும் என்ற போராட்டமும் வலுத்து வருகிறது. இதற்கு ஈடு கொடுக்க தனியார் பள்ளிகளில் கட்டாயமாக மேற்கூறிய மூன்று அம்சங்களையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தலாம். தனியார் பள்ளிகள் (மெட்ரிக், சி.பி.எஸ்.சி) உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஒரு பிரிவு தமிழ் வழியில் தான் இருக்க வேண்டும், அதுவும் இலவசமாகத் தான் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு உருவாக்கலாம் . இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகள் ஒரு பிரிவை தாய்மொழிக் கல்விக்கு ஒதுக்குவதால் அவைகளுக்கும் பெரிய இழப்புகள் இல்லை. அரசுக்கும் இதன் மூலம் செலவுகள்  இல்லை. அரசின் அங்கீகாரம் பெற வேண்டுமெனில் அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த செயல்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஆணையை அரசு பிறப்பித்தால் போதும். பல மாணவர்கள் தனியார் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேருவார்கள்.  இந்த கோரிக்கையை தமிழ் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு முன் வைக்கலாம். மேலும் தனியார் பள்ளியில் கட்டணம் கட்டி பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் யாவும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும். தமிழ் ஆர்வலர்கள் இது குறித்து  உங்கள் கருத்துகளையும் முன் வைக்கலாம்.  






[vuukle-powerbar-top]

Recent Post