Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேலூர் அருகே உள்ள சிறிபுரம் என்னும் இடத்தில் உள்ள கோவிலுக்கு ஒரு முறை சென்றோம். இது மிகப்பெரிய தங்கக் கோவிலாம். ஆயிரம் கிலோ தங்கத்தை வைத்து இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாம். நல்லது , தமிழர் நாடு தானே, இங்கு தானே தங்கத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளனர் என்ற மகிழ்ச்சியில் கோவிலுக்குள் செல்ல முயன்றோம்.   சாதாரணமாக உள்ளே சென்று விட்டு வந்து விடலாம் என்று எண்ணினோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

நீண்ட வரிசை காத்திருப்பு இல்லாமல் உள்ளே செல்வதற்கு ரூ 250 கட்டணம். வரிசையில் கட்டணமில்லாமல் செல்ல வேண்டுமென்றால் சிறைகள் போல சுற்றிலும் கம்பி வளையம் பொருத்தப்பட்ட  அறைகளில் காத்திருந்து தான் உள்ளே செல்ல வேண்டும். பல மணிநேரம் இந்த அறையில் காத்திருக்க வேண்டும் . காத்திருப்பு நேரத்தில் நொறுக்குத் தீணி விற்பனைக்கு உள்ளேயே உள்ளது. அப்படியே பல மணி நேரம் காத்திருந்து வரிசையில் நின்று உள்ளிருக்கும் கடவுளை பார்த்து விடலாம் என்று எண்ணினால் அங்கும் கட்டணம் தான். சிலையின் மீது ஒரு நெய் முழுக்கு செய்ய ரூ 500 கட்டணம். பெரிய அளவில் இங்கு முதலீடு செய்துள்ளனர். முதலீட்டை திரும்பப் பெறுவதற்கும், இருக்கும் முதலீட்டை காப்பதற்கும் தான் கட்டணம் பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா கோவில்கள், அடியார்கள் பாடல்பெற்ற சிறப்பான கோவில்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. சிவத் தளங்கள் மட்டுமே 300 கோவில்கள் உள்ளன . நூற்றுக்கணக்கான திருமால் கோவில்கள் உள்ளன. பல நூறு முருகன் கோவில்கள் உள்ளன இதையெல்லாம் விட்டுவிட்டு கட்டணக் கொள்ளை தனியார் கோவிலுக்கு தமிழர்கள் ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வியே எழுகிறது.  அரசு நிர்வாகம் செய்யும் கோவில்களில் ஐந்து ரூபாய் பெறப்பட்டு சிறப்புக்காட்சிக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள். இலவசமாக செல்ல வேண்டும் என்றாலும் பெரிய வரிசையெல்லாம் கிடையாது . ஆனால் இங்கு கட்டணம் பெறுவதை எதிர்த்து இன்று இந்தி முன்னணி பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள் . தனியார் கோவிலில் நடக்கும் பகல் கொள்ளையை கண்டித்து இவர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இந்த நிலையில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்  கோவில்களையும் இந்துத்வா  அமைப்புகளிடம் கொடுத்து விட வேண்டும் என்று கூறுகிறது இந்து முன்னணி. உண்மையான தமிழர் மத முன்னணி உருவாகும் வரை அரசு கோவில்கள் வேறு யாருக்கும் தாரை  வார்த்துக் கொடுக்க இயலாது. கட்டணக் கொள்ளை கோவில்களை அரசு கண்காணிப்பில் கொண்டு வரவும் வேண்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post