Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை போக்குவரத்து சந்திப்பில் பிச்சை எடுக்கும் இளம் பெண்கள் ! யார் இவர்கள் ?  

சென்னையில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்புகளில் பல காலமாக பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்களை காவல்துறை கைது செய்ததை அடுத்து இப்போது பல இளம் பெண்கள் அழுக்கு உடையுடன், கலைந்த தலையுடன், வாடிய முகங்களுடன் இந்த நெரிசல் மிக்க சந்திப்புகளில் பிச்சை எடுக்கிறார்கள். கடும் வெயிலின் தாக்கத்தில் வாகனங்களை ஓட்டிவரும் நபர்களே சோர்வடைந்து விடும் நிலையில் இப்பெண்கள் பல மணிநேரம் வெயிலில் பிச்சை எடுக்கிறார்கள். இவர்களை பின்னின்று இயக்குவது யார் ? ஏன் இளம் பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள் ? இவர்களின் எதிர்காலம் தான் என்ன ? இவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பல்லவா ? இவர்கள் இப்படியான வாழ்க்கை முறையை விரும்பி ஏற்கவில்லை.  இவர்களை யாரோ இந்த வாழ்க்கை முறைக்கு தள்ளி விட்டுள்ளனர் என்பது தெரிகிறது. இவர்களால் வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் மட்டும் இடையூறு  இல்லை, இவர்களின் இந்த வாழ்க்கை முறை இவர்களுக்கே பெரும் துன்பம் விளைவிப்பதாய் அமைந்துள்ளது. 

காவல்துறை இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டும் பிரச்சனை தீரப்போவதில்லை. இவர்கள் யார் , இவர்களின் பூர்வீகம் என்ன, யார் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்று விசாரணை நடத்த வேண்டும். இவர்களுக்கு பின்னால் உள்ள கும்பலை கைது செய்ய வேண்டும். மேலும் தன்னார்வ சமூக அமைப்புகளின் துணையுடன் இப்பெண்கள் அனைவரையும் மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அரசு மனிதாபிமான அடிப்படையில் இதை உடனே செய்ய முன்வர வேண்டும். சமூக, மனித நேய அமைப்புகளும் உடனடியாக இவர்களை மீட்க தாங்களாகவே முன்வரவேண்டும். 

பின்குறிப்பு : இப்படம் ரெட்டேரி சந்திப்பில் எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிச்சை எடுத்து வருகின்றனர் . இது போல சென்னையில் பல இடங்களில் இளம்பெண்கள் பிச்சை எடுத்து வருகிறார்கள். யாராவது இவர்களை மீட்க  உதவ முன்வந்தால் எங்கள் அமைப்பும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post