Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் ! தமிழக சுற்றுலாத்துறை தமிழர் அடையாளங்களை வெளிக்கொணர  வேண்டும் ! 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன். 2104 ஆம் ஆண்டில் 46 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தமிழர்களின் பண்பாடு, கலைகள், தமிழர் கோவில்கள், நீண்ட கடற்கரைகள், குறைந்த செலவில் உணவுகள் மற்றும் விடுதிகள் போன்ற சிறப்பம்சங்கள் ஆகும். தமிழக அரசு இனி மிகுந்த கவனத்துடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். 

'கடவுளின் சொந்த நாடு' என்ற அடைமொழியுடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்த கேரளத்தை தமிழகம் இப்போது தோற்கடித்து முன்னுக்கு வந்துள்ளது. தமிழர்களின் தொன்மை வரலாற்றை , தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு உணர்த்த இதை விட பெரிய வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைக்காது. தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி மூத்த மொழி என்பதை ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும் உணரும் வகையில் அரசு பரப்புரை செய்ய வேண்டும். பாவாணர் குறிப்பிட்டது போல 'தமிழ்நாடு உலக நாகரீகத்தின் தொட்டில்' , கமில் சுபவில்  குறிப்பிட்டது போல 'உலகின் கடைசி செம்மையான நாகரீகம் தமிழகம்', 'மூத்த குடி தமிழ்க் குடி'  போன்ற அழுத்தமான வாசகங்களை  சுற்றுலாப் பயணிகளிடம் அரசு கொண்டு சேர்க்க வேண்டும் . தமிழர்களின் ஒப்பற்ற சிற்பக் கலை, இசைக்கலை, மருத்துவக் கலை, கட்டடக் கலை, நாட்டுப்புறக்கலை போன்ற பல கலைகளை உள்ளடக்கிய நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதை உலக மாந்தர்களுக்கு பறைசாற்ற வேண்டும். இந்தியாவின் பூர்வ குடிமக்கள் தமிழர்களே என்பதை ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் அறியும்படி செய்தால் உலகமெங்கும் தமிழர்களுக்கு தனி மதிப்பு உண்டாகும். தமிழர் அடையாளங்களை, மொழியை, பண்பாட்டை, வரலாற்றை அழித்து வரும் இந்தியாவின் சூழ்ச்சியை இதன் மூலம் தமிழர்கள் முறியடிக்கலாம். உலகெங்கும் தமிழர்களின் பெருமை சென்றடையும். தமிழக அரசு இதை கவனத்தின் கொண்டு இனி வரும் காலங்களின் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post