Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

 தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றிட  4/07/2015 சனிக்கிழமை போராட்டம்!  தமிழர் உரிமை மீட்பு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாரீர் .


தமிழ்நாட்டு அரசியலிலும் திரைபடத்துறையிலும் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த நூறு ஆண்டுகளாக அரசியலில் தமிழர் அல்லாதவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆளுமை செலுத்தி வருகிறார்கள். தமிழர்களை திராவிடர்கள் என்று அடையாள படுத்தியும் தமிழர்களுக்குள் கீழ் சாதி மேல் சாதி என்ற ஆரிய கருத்தியலுக்கு  உரமிட்டு சாதிகளுக்கு நடுவே காழ்ப்புணர்ச்சியை பெரிதாக்கி குளிர் காய்கிறார்கள் தமிழர் அல்லாத திராவிடர்கள். இவர்களின் சூழ்ச்சியால் தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையை பேண முடியாமல் அடித்துக் கொண்டு சாகும் நிலையை உருவாக்கிவிட்டனர் திராவிட மதக் கருத்தியலாளர்கள் . அப்படி தமிழர்கள் சாதியை வைத்து சண்டையிட்டுக் கொள்ளும் போதெல்லாம் சாதி சண்டையை கண்டித்து திராவிடர்களே  போராட்டங்களையும் முன்னெடுப்பார்கள் . இவ்வாறு கடந்த நூறு ஆண்டுகளாக சாதி ஒழிப்பு நாடகப் போராட்டம், சாதி சண்டை கண்டிப்பு போராட்டம் நடத்தி தமிழகத்தின்  சாதிகளிடையே இணக்கத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டனர் திராவிடர்கள் . தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைய எந்த வகையிலும் துணை புதிய மாட்டார்கள் ஆரிய திராவிட மதத்தினர்.

இவ்வாறு தமிழக அரசியலில் தமிழர் அல்லாதவர்கள் ஆதிக்கம் செய்ய , திரைப்படத் துறையில் உள்ள நடிகர்களும் தமிழர்களை ஏமாற்ற தயங்கவில்லை. தமிழர் அல்லாத நடிகர்கள் தங்களை தமிழர்கள் போலவே வேடமிட்டு , தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக நடித்து திரைபடத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . கடந்த 70 ஆண்டுகால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தமிழர் அல்லாதவர்கள் முன்னணியில் உள்ளனர். இவர்களே நடிகர் சங்கத்தையும் வழிநடத்தி வருகின்றனர். தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என பலரும் அவர்களது இனத்தை முன்னேற்ற தமிழக திரைப்படத் துறையை பயன்படுத்தி வருகிறார்கள். இன்று தமிழ் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்களே ஆவார்கள். திரைப்படத்தின் ஊடாக தமிழக அரசியலிலும் இவர்கள் எளிதாக நுழைந்தும் விடுகிறார்கள். எடுத்தக் காட்டாக , விஜயகாந்த் , ஜெயலலிதா , கருணாநிதி போன்ற தமிழர் அல்லாதவர்கள் திரைத்துறையின் மூலமாக தமிழக அரசியலில் காலப் பதித்தவர்கள் . வேற்றின மக்களின் ஆதிக்கத்தால் தமிழகம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. தமிழகத்தை சுடுகாடாக வேற்றின மக்கள் மாற்றினர். தமிழினத்தின் அனைத்து உரிமைகளும் இவர்களால் பறிபோனது.

இதை நாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. காலம் கடந்தாலும் தமிழக நடிகர்கள் சங்கம் தமிழர்களால் தான் வழிநடத்தப் படவேண்டும் . தெலுங்கர்கள், மலையாளிகள் தலைமை தாங்கக் கூடாது என்பதை நாம் வலியுறுத்துவோம் . தமிழர்களே தமிழக திரைப்படத் துறையில் தலைமை தாங்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரையும் தமிழக நடிகர் சங்கம் என்று மாற்றிட அனைவரும் போராடுவோம். தமிழர் அடையாளத்தையும் உரிமைகளையும் மீட்போம். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இப்போரத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.



    
[vuukle-powerbar-top]

Recent Post