Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நியாயவிலைக் கடையும் மூடப்படும் இடர்நிலை. சமையல் எரிவாயுவை தொடர்ந்து உணவுக்கும் நேரடியாக மானியம் வழங்க நடுவண் அரசு முடிவு.

இத்தனை ஆண்டுகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த நியாயவிலைக் கடைகளை மூட்டி நடுவண் அரசு உணவுக்கான மானியத்தை நேரடியாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. சிறிது சிறிதாக நடுவண் அரசு கொடுக்கும் மானியத்தையும் குறைக்க உள்ளது, முடிவில் நடுவண் எல்லா மானியங்களையும் நிறுத்திவிடும் இடர் நிலையும் உருவாகக் கூடாது. நியாயவிலைக் கடைகளை மூடி வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நடுவண் அரசு, அரசு பள்ளிகளையும் , அரசு மருத்துவமனைகளையும் மூடிவிட்டு அதற்கான தொகையை வங்கியில் செலுத்தி விடுவோம், மக்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்லுங்கள் என்று விரைவில் சொல்லக் கூடும்.

எண்ணை நிறுவனங்கள், உணவு சேமிப்பு கிடங்குகள் , கல்வி நிறுவனங்கள், மருத்துமனைகள், மக்கள் சேவைகள் அனைத்தும் மாநில அரசின் கீழ் தான் இயங்க வேண்டும். மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளில் நடுவண் அரசு இனியும் தலையிடக் கூடாது . மாநில அரசுகளில் உரிமை பறிக்கப்பட்டால் மக்கள் நிரந்தரமாக இந்தி அரசுக்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகும். இதனால் மக்களின் கல்வி உரிமை, பண்பாட்டு உரிமை மற்றும் வாழ்வுரிமை தேசிய இனங்களின் கைவிட்டு இந்தி அரசுக்கு சென்றுவிடும். தமிழக கட்சிகள் இனியாவது தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைக்கு குரல்கொடுக்க வேண்டும். மாநில தன்னாட்சி மற்றும் மொழி , இன,  நில உரிமைக்காக நாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து நம்முடைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வோம்.



[vuukle-powerbar-top]

Recent Post