Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தெலுங்கு மாநிலங்களில் அரசியல் வாய்ப்புகள் குறித்து தமிழகத்தில் கருத்தரங்கு நடத்த வேண்டிய தேவை என்ன ? 

பாஜகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் சில தெலுங்கு கட்சிகளும் சேர்ந்து சென்னையில் தெலுங்கு மாநிலங்களில் அரசியல் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை நடத்த உள்ளனர். சென்னை நகரை அரும்பாடுபட்டு தமிழர்கள் ஆந்திராவிடம் இருந்து மீட்டனர். தமிழர்கள் அப்போது அந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றால் இந்நேரம் சென்னை தமிழ்நாட்டில் இருந்திருக்காது. இவ்வாறு பாடுபட்டு நாம் சென்னையை மீட்டாலும் தெலுங்கர்களின் ஆதிக்கம் சென்னை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சென்னை வணிகம் முழுவதும் தெலுங்கர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் தெலுங்கர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இதனால் தமிழகத்தில் அரசியலும் தமிழர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. தமிழ் ஊடகத் துறையும் தெலுங்கர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது . இதை உறுதி செய்யும் விதமாக இப்போது பாஜக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக தெலுங்கு மாநிலங்களில் அரசியல் வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது என்று தமிழ் மாநிலத்தில் கருத்தரங்கு நடத்தி தமிழர்களை வெறுப்படைய செய்கிறது. ஏற்கனவே திராவிட அமைப்புகளால் தமிழ் மக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு உள்ளனர். எங்கோ ஒரு இடத்தில் சாதி சிக்கல் உருவானால் ஒட்டுமொத்த தமிழினமே சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்தி திராவிடர்கள் தான் தமிழ்நாட்டை தலைமை தாங்க சிறந்தவர்கள் என்ற மாயத் தோற்றத்தை தெலுங்கு திராவிடர்கள் இங்கு உருவாக்கி உள்ளனர் . 

இப்படியான ஒரு நிலையில் இந்துத்வா அமைப்புகளின் திராவிடத்துடன் கைகோர்க்கும் வகையில் தமிழகத்தில் தெலுங்கு கருத்தரங்கை நடத்துவது தமிழர்களை திட்டமிட்டு அவமதிக்கும் செயலாகும். தெலுங்கர்களுக்கு இந்தியாவில் நான்கு மாநிலங்கள் உள்ளது என்று தெலுங்கர்கள் கூறுவது இப்போது உறுதிபடுத்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தை இப்போது ஆள்வது திராவிட தெலுங்கர் கட்சிகளாக இருக்கலாம் . ஆனால் இப்படியே வரலாறு இருந்து விடாது என்பதை இந்துத்துவா அமைப்புகளுக்கும் திராவிட தெலுங்கு அமைப்புகளுக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் . தமிழகம் மீண்டும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் வரும். என்றுமே தமிழ்நாடு தமிழர்களுக்கானது. தமிழ்நாட்டில் தெலுங்கு அரசியலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் . தமிழர்களின் திட்டமிட்டு அவமதிக்கும் இப்படியான கருத்தரங்கிற்கு தமிழர் தரப்பில் இருந்து வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களை எதிர்த்து பாஜக, ஆர் எஸ் எஸ் மற்றும் தெலுங்கு அமைப்புகள்  இப்படியான செயல்களில் ஈடுபடுவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post