Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"இன்று நேற்று நாளை" என்று ஒரு படம். இப்படத்தில் 2065 ல் இருந்து 2015 ஆம் ஆண்டிற்கு ஒரு கால இயந்திரம் வருகிறது. கால இயந்திரங்கள் குறித்து ஆங்கிலப் படங்கள் மட்டுமே நாம் பார்த்து பழகிவிட்ட நிலையில் தமிழ்ப் படங்களில் இப்போது கால இயந்திரம் பற்றி காண்பது புதுமை.

2065 வரை தமிழ் மொழி அழியாமல் வாழுமா என்பதற்கு இப்படம் ஓரளவு பதில் அளித்துள்ளது. 2065 ல் ஒருவன் இந்த கால இயந்திரந்தை கண்டு பிடிக்கிறான். அவன் இந்த இயந்திரத்தை இயக்கும் போது இயந்திரத்தில் தமிழ் மொழி தானியங்கி ஒலிப்பதிவாக வருகிறது. இயந்திரத்தின் செயல்பாடுகளை தமிழ் மொழியில் கூறுகிறது அந்த குரல் பதிவு.

உண்மையில் நாம் அனைத்து விதமான தொழில் நுட்பத்திலும் இப்போது தமிழை கட்டாயமாக பயன்படுத்தத் தொடங்கினால் நிச்சயம் 2065 ல் தமிழ் மொழி உயர்ந்த தொழில் நுட்பத்திலும் பயன்படுத்தப்படும் என்பதே இந்த படத்தில் காட்டப்பட்ட செய்தி. இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் கண்டுபிக்கப்பட்ட ஒரு தானியங்கி மகிழுந்து ஆங்கிலத்தில் கட்டளை ஏற்பதாக படத்தில் காட்டியிருப்பது முரண். இந்த மகிழுந்தும் தமிழ் மொழியில் இயங்குவதாக காட்டியிருக்கலாம். ஒருவேளை இனி வரும் காலத்தில் தான் தமிழ் மொழி வளர்ச்சி பெரும் போல் உள்ளது. இனி எந்த தொழில் நுட்பமானாலும் தமிழை நாம் கட்டாயமாக அதில் சேர்க்க வேண்டும் என்பதை
நினைவில் கொள்வோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post