Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி அரசின் இந்தி வெறி பல தேசிய இனங்கள்  வாழும் இந்தியாவை உடைக்கும் !

எப்போதும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரதமர் மோடி அங்கு செல்லும்போதெல்லாம் இந்தியில் மட்டும் பேசி இந்தியை ஊக்குவித்து வருகிறார். இம்முறை தாசுகன்ட் நகரில் அவர் பேசிய போது இந்தியா பொருளாதாரத்தில் வளரும் போது இந்தியும் வளரும் என்று தனது இந்தி வெறியை உமிழ்ந்துள்ளர். இந்தியா வளரும் போது இந்தியாவில் உள்ள அனைத்து இந்திய மொழிகளும் வளரும் என்றல்லவா இவர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இந்தி வளரும் என்று ஒரு மொழியை மட்டும் குறிப்பிட்டு மோடி கூறியுள்ளது ஏதோ இந்தியாவில் இந்தி மட்டும் தான் பேசப்படுவது போலவும் இந்தியை தவிர்த்து வேறு எந்த மொழியும் வளராது என்பதை போலவும் மோடி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

மோடி அரசு இந்தி மொழிக்கும் இந்தி இனத்திற்குமான அரசாக மட்டும் செயல்படுவதாக இருந்தால் அவர்கள் இந்தி நாட்டை தனி நாடாக அறிவித்துக் கொள்ளட்டும். மற்ற மொழி பேசும் தேசிய இனங்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்கி அதில் அனைத்து மொழிகளுக்கும் சம உரிமையை வழங்குவார்கள். இந்திய நாட்டை இந்தி மொழியை திணித்து  பல கூறுகளாக மோடி அரசு உடைப்பதற்கு தான் தொடர்ந்து இந்தி அடையாளத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களின் மீது திணித்து வருவதாக தெரிகிறது. மொழி சம உரிமை கொடுக்கவில்லை என்றால் இந்தி அரசு தனி நாடாக செயல்படுவதே நன்று . இதை நாடாளுமன்றத்தில் துணிச்சலாக இந்தி அல்லாத தேசிய இன மக்கள் தெரிவிக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post