Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாநில கல்வித் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று தினத் தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது . நீண்ட நாட்கள் கழித்து தினத்தந்தி தமிழினத்தின் மீது அக்கறை கொண்டு இவ்வாறன தலையங்கத்தை வெளிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

உண்மையில் இது குறித்த புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியில் தான் ஆழ்த்துகின்றன. இந்திய தொழில் நுட்ப கழகத்தில் தமிழக கல்வி திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் வெறும் 33 பேர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர் என்பது வருத்தப்பட வேண்டிய செய்தி. தமிழகத்தில் இருந்து ஐ.ஐ.தி. தேர்வு எழுதியவர்கள்  மொத்தம்  2815. இதில் தேர்வானவர்கள் மொத்தம் 451 பேர்கள். இந்த 451 பேர்களில் வெறும் 33 பேர்களே தமிழக பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். மீதம் உள்ளவர்கள் நடுவண் அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். இப்படியான நிலை அண்டை மாநிலங்களில் இல்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 2386  மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . இவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமானது ? தமிழகத்தின் கல்வி வழங்கும் முறை முற்றிலும் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை போல மாணவர்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது.  அதனால் பிற திறன்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப் படுவதில்லை என்ற குறைப்பாடு இருக்கிறது என்பது தெரிகிறது.

இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் ஐ,ஐ .டி தான் இந்தியாவிலேயே தரம் வாய்ந்த தொழில் நுட்ப கல்வி நிலையம் என்று அனைத்து நிறுவனங்களும் கருதுகின்றனர். அப்படி இருக்கும் போது தமிழகத்தை சேர்ந்த தமிழ் வழியில் படித்த மாணவர்களும், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் இந்த கல்வி நிலையில் அதிக அளவில் நுழைந்தால் மட்டுமே நம் மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க இயலும். இன்னொன்று, இந்திய தொழில் நுட்ப கழகத்திற்கு ஈடாக அல்லது அதற்கும் மேலாக தமிழக அரசின் கீழ் இயங்கக் கூடிய தலைசிறந்த தொழில் நுட்பக் கழகத்தை ஏன் தமிழக அரசு உருவாக்கக் கூடாது? தமிழக அரசின் கீழ் அண்ணா பல்கலைகழகம் இருந்தாலும் இந்திய தொழில் நுட்பக் கழகத்திற்கு நிகரான செயல்திட்டத்தை நம்முடைய கல்வி நிலையங்களும் வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களை நோக்கி அனைத்து அறிவியலாளர்களும் படையெடுக்க வேண்டும். இந்திய தொழில் நுட்ப கழகத்தை காட்டிலும் அதிக அளவில் புதிய படைப்புகளை நம் தமிழக மாணவர்கள் படைதிடல் வேண்டும். அதற்கு அடிப்படையாக பள்ளி பாடத்திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். வெறும் பாடத்தை  மட்டும் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதும் முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். செயல்முறைக் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பிற மாநிலங்களை போலவே சிறந்த மாநில பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சிறந்த அறிவியலாளர்களை உருவாக்குவதில் அரசுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை தமிழக அரசு உணர்தல் வேண்டும்.  பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய அறிவர்கள் தோன்றி அறிவியலில், கட்டிடக் கலையில், மருத்துவத்தில், வேதியலில், புவியியலில்  பல சாதனைகள் புரிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  




[vuukle-powerbar-top]

Recent Post