Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆகத்து 15 இந்திய சுதந்திர நாளில் இந்தித் திணிப்புக்கு  எதிரான ட்விட்டர்பரப்புரைக்கு அணியமாவோம் ! நாம் பதிவு செய்ய வேண்டிய செய்திகளை  இப்பதிவில் நீங்கள் காணலாம்.

நம் எண்ணங்களை இந்திய அரசும் உலக நாடுகளும் தெரிந்துகொல்லும்வகையிலும், இந்தியா என்றால் அங்குப் பேசப்படும் ஒரே மொழி இந்தி என்ற வெளிநாட்டினர் நினைப்பது தவறு என்பதையும் சொல்லும்விதமாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரியும், நாளை அகஸ்ட் 15 சுதந்திர நாளன்று இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இந்தி திணிப்பிற்கு எதிராகப் போராடும் நண்பர்கள் டுவிட்டரில் இந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் Hastag பரப்புரையை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தப் பரப்புரையில் தாங்களும் கலந்துகொண்டு தங்களின் டுவிட்டர் பதிவுகளில் ‪#‎StopHindiImposition‬ என்ற Hastag கைப்பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். இந்த செய்தியைத் தங்கள் நண்பர்களிடம் தெரிவித்து அவர்களையும் முடிந்தவரை பங்குகொள்ளச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
1) காலை 9.௦௦ மணிக்குத் தொடங்கும் இந்த Hastag பரப்புரையில் சுமார் 10 மணிக்குள்ளாகக் குறைந்தது 100 #StopHindiImposition என்ற hastag கொண்ட பதிவுகளை பதிவிட வேண்டும்.
௨) பதிவு என்பது பெரியதாக இருக்கவேண்டுமென்று இல்லை. ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ இருந்தால் போதுமானது.
3) என்ன பதிவுகள் போடுவது எனத் தெரியவில்லையெனில் நான் இங்குக் கொடுத்துள்ள 70 சிறிய செய்திகளை நகல் எடுத்து ஒட்டிப் பதியலாம்.
4) ஒருவர் நாளை முழுதும் எவ்வளவு பதிவுகள் வேண்டுமென்றாலும் பதியலாம்.
5) தங்கள் பதிந்த பதிவுகளுக்கு வரும் Re-Tweet செய்திகளிலும் தாங்கள் அதே போன்று #StopHindiImposition என்ற hastag கை பதிவிட வேண்டும்.
6) இதைத் தாங்கள் செல்பேசிகளிலும், TABLET, கணினிகளிலும் செய்யலாம். முடிந்தவரை கணினி தங்கள் செய்திகளை நகல் எடுத்து ஓட்ட ஏதுவாக இருக்கும்.
7) நாளை முழுதும் நாம் இதற்காக ஆதரவு தரலாம்.
நன்றி
--------------------------------------------------------------------------------
1 - இந்தியாவில் அனைவரும் சமமெனில், அனைத்து மொழிகளும் சமம்- மொழி சமத்துவத்தை மேம்படுத்து #StopHindiImposition
2 - அரசியமைப்பு சட்டம் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. இந்தியை மட்டும் ஆட்சி மொழியாகியது ஏன் #StopHindiImposition
3 - நடுவணரசை ஆட்சிமொழி சட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்துகிறேன். #StopHindiImposition
4 - அரசியமைப்பு சட்டம் 8-வது அட்டவணையுள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழியாகப் பிரகடனம் செய் #StopHindiImposition
5 - இந்தி பேசாத மாநிலங்களில் வலிய இந்தி திணிப்பு செய்வது மொழி தீவிரவாதம் #StopHindiImposition
6 - நடுவணரசு எதோ ஒரு மொழியர்களால் அமைக்கப்படவில்லை #StopHindiImposition
7 - இந்திய மாநிலங்கள் மொழியடிப்படையில் உருவானவை. எனவே அவர்கள் மொழி வளர்ச்சியை அவர்களிடமே விட்டுவிடு #StopHindiImposition
8 - பன்முகத்தன்மையில் ஒருமை என்பது நாட்டின் வலிமை. அந்த பன்முகத்தன்மையை அழிக்க வேண்டாம் #StopHindiImposition
9 - பன்முகத்தன்மையை மொழித்திணிப்பால் அழிப்பது நாட்டின் ஒற்றுமையை அழிப்பதாகும். #StopHindiImposition
10 - நாட்டில் இந்திபேசாதவர்களை கடைத்தர(Low Class) குடிமகனாக அரசு பாவிக்கிறது. #StopHindiImposition
11 - நாட்டை இணைப்பது சுதந்திரம் மற்றும் சமத்துவம் மட்டுமே, ஒரேயொரு மொழியின் மேலாதிக்கமல்ல. #StopHindiImposition
12 - இந்தியா பன்முகத்தன்மையின் சொர்க்கம். சொர்கத்தை நரகமாக மாற்ற வேண்டாம். #StopHindiImposition
13 - மாநிலங்களில் உள்ள CBSC பள்ளிகளில் இந்தி என்பது கட்டாயம். அங்கு தமிழுக்கு இடமில்லை. #StopHindiImposition
14 - நாட்டில் எம்மொழி மதிக்கப்படாதபோது எப்படி நான் இந்தியனாக எனப் பொருமைகொள்ள முடியும். #StopHindiImposition
15 - நாட்டின் நலத்திட்ட பெயர்களை ஏன் இந்தியில் வலிய வைக்க வேண்டும். #StopHindiImposition
16 - காலனியாதிக்க எண்ணம் - நான் நானாக இருப்பேன், நீயும் நானாக இருக்கவேண்டும். #StopHindiImposition
17 - இந்திபேசாத மாநிலங்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கையா?, இந்திபேசும் மாநிலங்களில் இல்லையா? .#StopHindiImposition
18 - இந்திபேசாத மாநிலங்களில் இந்தித்திணிப்பு என்பது மனித உரிமைகளை மீறுவதாகும். #StopHindiImposition
19 - இந்தி மட்டுமே ஆட்சிமொழியெனில், இந்திபேசும் மக்களை மட்டுமே ஆட்சிமக்களாக அறிவிக்கலாமே. #StopHindiImposition
20 - மாநிலத்தின் சாரன (Train) பயனசீட்டுகளில் தமிழில்லை, இந்தி மட்டுமே #StopHindiImposition
21 - இந்திபேசாத மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தன் மாநில மொழியில் பேச சபாநாயகரிடம் ஏன் அனுமதி பெற வேண்டும். #StopHindiImposition
22 - இந்தி ராஜ்யபாஷா எனப் பிறரிடம் இந்தித்திணிப்பு வேலைகள் செய்வோரை நடுவணரசு கவுரவிப்பது படுமேசம். #StopHindiImposition
23 - நடுவணரசு மக்களின் வரிபணத்தை செலவழித்து ஒரேயொரு மொழியை மட்டும் நாடுமுழுதும் பரப்புவது துரோகம். #StopHindiImposition
24 - நடுவணரசு அலுவல்களில் இந்தியை திணிக்க/பரப்ப அலுவல்மொழி இயக்குனர் என்ற பணியிடம் உள்ளது - #StopHindiImposition
25 - நான் இந்தியன் என்பதில் பெருமை. ஹிந்தியன் என்பதில் இல்லை. - #StopHindiImposition
26 - இந்திபேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பதால் நாட்டில் ஒருமை, ஒற்றுமை, சமத்துவம் ஏற்படாது. இது ஏகாதிபத்திய நசுக்கல் -#StopHindiImposition
27 - ஒரு சுதந்திர நாட்டில் அனைவரும் தங்களின் இன்பதுன்பங்களை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.- #StopHindiImposition
28 - விமான பயணங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் அறிவிப்புகள் இல்லை. இந்தியில் மட்டுமே. #StopHindiImposition
29 - நடுவணரசின் கிஸான் தொ.கா யில் ஏன் இந்தி மட்டும். இந்திபேசாத மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா. #StopHindiImposition
30 - என்னுடைய தேசபற்றை காண்பிக்க இந்தி தேவையில்லை. என் தாய்மொழியே சிறந்தது. #StopHindiImposition
31 - இந்தி நாட்டின் ராஜ்பாஷா என்றால் என்ன? இது ராஜ்யங்களுக்கு ராஜாவா? அல்லது மொழிகளுக்கெல்லாம் ராஜாவா? #StopHindiImposition
32 - நான் இந்திய தேசியவங்கிகளை பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஹிந்திய தேசிய வங்கியை அல்ல. #StopHindiImposition
33 - நான் இந்திய சாரனத்துறை(Railway) சேவைகளைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஹிந்திய சாரனத்துறையை அல்ல. #StopHindiImposition
34 - நடுவணரசின் மக்கள் தொடர்புகள் யாவும் மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். #StopHindiImposition
35 - இந்தியாவின் ஒற்றுமையை காக்க அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க மற்றும் வளர அரசு கற்றுக்கொள்ளவேண்டும்.. #StopHindiImposition
36 - நடுவணரசு அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும். இந்தியை மட்டுமல்ல. #StopHindiImposition
37 - இந்திமொழியர்கள் IIT-IAS தேர்வுகளில் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதலாம். மற்றமொழியர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுத கூடாது. #StopHindiImposition
38 - இந்தி திணிப்பால் நாட்டில் ஒருமையை ஏற்படுத்த முடியாது. மொழிசமத்துவதை ஊக்கப்படுத்து. #StopHindiImposition
39 - மொழி அனைவரையும் இணைக்கும். இந்தியாவில் இந்த இணைப்பு ஒருமுகமாகவும், பலவந்தமாகவும் உள்ளது. இந்தி திணிப்பு இணைப்பை உடைக்கும். #StopHindiImposition
40 - ஒவ்வொரு இந்திய மொழிகளுமே தேசிய மற்றும் மாநில மொழிகள் தான். #StopHindiImposition
41 - இந்தி தேசிய மொழி என்றால் மற்ற மொழிகள் என்ன ஊசிய மொழிகளா? #StopHindiImposition
42 - நடுவணரசுக்கு என எந்த தேசியமொழியுமில்லை. இனியும் இந்தி தேசியமொழியெனப் பொய்பரப்புவதை நிறுத்த வேண்டும். #StopHindiImposition
43 - நாட்டில் 60% க்கும் மேலாக உள்ள இந்திபேசாத மக்களின் மொழிகளுக்குக் கிடைக்கவேண்டிய சம மொழியுரிமையை கொடு. #StopHindiImposition
44 - தமிழ்நாட்டின் சாரன நிலையங்களில்(Rail Station) இந்தியில் பெயர்பலகைகள் உள்ளது போல் இந்திபேசும் மாநிலங்களில் தமிழில் பெயர்பலகைகளை வைக்க வேண்டும். #StopHindiImposition
45 - இந்திமொழியர்கள் தங்கள் தாய்மொழியில் நாட்டில் அனைத்து வங்கிகளிலும் சேவையைப் பெறுகின்றனர். மற்றமொழியினர் நிலை? #StopHindiImposition
46 - இந்தி குஜராத்திகளுக்கு அயல்நாட்டுமொழி எனக் குஜராத் நீதிமன்றம் கூறுகிறது (http://bit.ly/1jcXRZ9). எங்களுக்கும் அதேதான். #StopHindiImposition
47 - இந்திமொழியை வளர்க்க ஒதுக்கப்படும் நிதி நாட்டின் எல்லா மொழிகளையும் வளர்க்க ஒதுக்கப்படும் நிதியை விடப் பன்மடங்கு அதிகம். #StopHindiImposition
48 - நடுவணரசு இந்தியை கற்கும் மற்றும் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு வெகுமதி, அன்பளிப்பு, கேடயம் வழங்குவது பித்தலாட்டதனம். #StopHindiImposition
49 - பித்தலாட்டதனம் வழியே இந்தியை பிரபலப்படுத்துவது மற்றமொழிகளின் வளர்ச்சியை மற்றும் வளமையை கொலைசெய்வதற்கு சமம்.#StopHindiImposition
50 - மாநில மொழிகளின் குரல்வளையை நெரித்து இந்தியை பரப்புவத்தின் நோக்கம் தான் என்ன? #StopHindiImposition
51 - தமிழர்களின் மொழியுரிமையை கொள்ளையடித்து தமிழ்நாட்டில் சாரன(Train) பயனசீட்டுகளில் இந்தியை மட்டுமே திணிப்பதேன்? #StopHindiImposition
52 - இந்தி திணிப்பு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தாது, மாறாக நாட்டில் விரிசலை ஏற்படுத்தும். #StopHindiImposition
53 - இந்தி திணிப்பு நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் ஒரு கருவி. நாட்டின் ஒற்றுமையைக் காக்க மொழிச்சமத்துவத்தை ஊக்கப்படுத்து - #StopHindiImposition
54 - பாக்கிஸ்தனின் உருது திணிப்பால் பங்களாதேஷ் என்ற நாடு உருவானது. இந்தியாவில் அது போன்ற நிலைமை வேண்டாம். #StopHindiImposition
55 - நடுவணரசு இந்தியை ஊக்குவிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி, பணி உயர்வு வழங்குவதைப்போலத் தமிழ், கன்னடம், மாராத்தி போன்ற மொழிகளை ஊக்கபடுத்தும் ஊழியர்களுக்கு ஏன் வழங்கப்படுவதில்லை. #StopHindiImposition
56 - கடவுசீட்டு (Passport) என்பது ஏன் அடையாளம். அதில் எனக்குத் தொடர்பில்லாத இந்தி இருக்கும்போது என்னுடன் தொடர்புள்ள என் தாய்மொழி எங்கே?. #StopHindiImposition
57 - கடவுசீட்டு (Passport) அந்தந்த மாநிலங்களின் மொழியில் தான் வழங்கப்பட வேண்டும். இந்தியில் இல்லை. #StopHindiImposition
58 - LPG உருளைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழ் மட்டுமே தெரிந்த என் அம்மாவின் உயிர் நடுவணரசுக்கு என்ன மயிரோ? #StopHindiImposition
59 - பல்வேறு மாநிலங்கள் அவர்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் மொழியடையாளம் போன்றவற்றின் திரட்சி தான் இந்தியா என்பதை அரசு மறக்ககூடாது. #StopHindiImposition
60 - இந்தியை தேசியமொழியாக அழைப்பது இந்திபேசாத மக்களை மடையர்களாகவும், அவர்களின் மொழியை ஊசிய மொழிகளாக அழைப்பதற்கு சமம். #StopHindiImposition
61 - பழமொழிகள் பேசும் இந்தியா போன்ற குடியரசு நாட்டில் அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க, வளர்க்க வேண்டும்.#StopHindiImposition
62 - இந்தியாவின் ஒற்றுமை என்பது ஒரு குடும்பத்தின் ஒற்றுமை போன்றது. இந்த ஒற்றுமை குடும்பத்தியுள்ள ஒவ்வொருவருடைய உரிமைகளை மதிக்கும்வரை தான். #StopHindiImposition
63- இந்திமொழியர் மாநில நீதிமன்றங்களில் இந்தியை பயன்படுத்தலாம். ஆனால் மற்றமொழி மாநிலங்களில் அந்த மாநில மொழியை பயன்படுத்த கூடாது. #StopHindiImposition
64 - இந்திய அரசியமைப்பு சட்டத்தில் இந்தியை தேசியமொழியாக மாற்றம்கொண்டுவர இந்தி திணிப்பு மட்டுமே போதும் என்பது மறுக்கமுடியாத உண்மை. #StopHindiImposition
65 - இந்தியை திணிப்பது நாட்டின் ஒருமை மற்றும் ஒற்றுமையை அழித்துவிடும் - Field Marshal KM.கரியப்பா(1967-68) #StopHindiImposition
66 - ஒருமொழியை இன்னொரு மொழியர்களிடம் வலிய திணிப்பது என்பது இந்தியை காட்டிலும் சிறந்த இலக்கிய இலக்கணம் கொண்ட மொழிகளை அழிப்பதற்கு ஒப்பாகும். Field Marshal KM.கரியப்பா(1967-68) #StopHindiImposition
67 - இந்தி பேசும் மாநிலங்கள் தங்கள் மொழி பரப்பு வேலைகளைத் தங்களது எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். #StopHindiImposition
68 - நடுவணரசு ஒரு மொழியர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. #StopHindiImposition
69 - இந்தி - இந்தியா என அரசு சொன்னால் நாங்கள் தமிழ்-தமிழ்நாடு என சொல்லவேண்டிவரும். #StopHindiImposition
70 - மொழி என்பதற்கு இன்னொரு பெயர் உளி. அதைகொண்டு கல்லை சிற்பமாக வடிக்கலாம், சின்னாபின்னமும் ஆக்கலாம். நடுவன் அரசு புரிந்துகொள்ளவேண்டும். #StopHindiImposition
[vuukle-powerbar-top]

Recent Post