Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் உள்ள அறிவாளி கூறுகிறார், அதெப்படி 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று முட்டாள் தனமாக கோரிக்கை வைக்கிறார்கள். தமிழகத்தில் கூட இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர். இந்த மொழிகள் எல்லாம் தமிழக அரசின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று இவர்கள் போராடுவார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நம் பதில்,

மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அந்தந்த மாநிலங்களை அந்தந்த தேசிய இனத்தவர்களே தான் ஆள வேண்டும் என்ற நிலை வந்து விட்டது (தமிழகத்தில் மட்டும் அந்த நிலை வரவில்லை ) ஒவ்வொரு மாநில மொழிகளையும், பண்பாட்டையும், உரிமைகளையும் , இனத்தவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசின் கீழ் வந்துவிட்டது . ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆட்சி மொழியும் உருவாக்கப்பட்டது. ஒரு தேசிய இனத்தின் மொழி தான் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமே தவிர யாரெல்லாம் வந்து மாநிலத்தில் குடியேறுகிறார்களோ அவர்களின் மொழிகள் எல்லாம் ஆட்சி மொழியாக்க முடியாது. அப்படி எல்லா மாநிலத்திலும் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக இருக்குமே எனில் மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டதின் நோக்கமே சிதைந்து விடும்.

மாநிலங்களின் நிலை இவ்வாறிருக்க நடுவண் அரசை பொறுத்தவரை எந்த ஒரு தனிப்பட்ட மாநில மொழியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தக் கூடாது. காரணம் நடுவண் அரசு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான கூட்டரசு ஆகும். இந்தியா ஒரு மொழி பேசும் தேசம் அல்ல . அது பல தேசங்களை உள்ளடக்கிய நாடு . இந்த நாட்டை நிர்வாகம் செய்யும் அரசு அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் . அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது தான் நியாயமான கோரிக்கை . இக்கோரிக்கையை ஏற்க மறுக்கும் இந்தியர்கள் மாநில ஆட்சி மொழியில் கை வைக்கும் விதமாக மாநிலத்தில் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தங்கள் விசக் கருத்தை உமிழ்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான மொழிக் கொள்கையை, இனக்கொள்கையை தீர்மானிக்கும் . அது அந்த மாநிலத்தின் தேசிய இனத்தின் சிக்கல். அதை அந்த மண்ணின் மைந்தர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் இந்திய அரசோ மாநிலங்களின் வரியை பிடிங்கிக் கொண்டு அந்த மாநிலத்திலேயே அந்நிய மொழிகளை திணிக்கிறது . இதைத் தான் நாம் எதிர்க்க வேண்டி இருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்பதும், தாய் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதும் ஒரே நேர்கோட்டில் எழும் கோரிக்கைகளே . 
[vuukle-powerbar-top]

Recent Post