Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் தமிழ் இந்து நாளிதழில் நஞ்சை கக்கியுள்ள பி.ஏ. கிருஷ்ணன்!

இந்தியாவில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று நாம் அனைவரும் குரல் கொடுக்க இவர் தமிழ்நாட்டில் அனைத்து மொழிகளும் தமிழக அரசின் ஆட்சி மொழியாகட்டும் என்று சர்வாதிகார தொனியில் பேசுகிறார். செந்தில்நாதனுக்கு பதில் அளிக்கும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார் பி.ஏ. கிருஷ்ணன்.

//மாநிலங்களில் புழங்கும் எல்லா மொழிகளுக்கும் உரிமைகள் வேண்டும் என்று சொல்லும் இவர், போராட்டத்தைத் தமிழகத்தில் ஏன் தொடங்கக் கூடாது? மாநிலத்தோடுதான் ஏழை மக்களுக்கு அதிகம் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை. அரசியல் சட்டம் 345-ம் பிரிவின்படி மாநில அரசே ஆட்சி மொழிகளை அறிவிக்கலாம். ஜார்க்கண்ட் மாநிலம் ஒரியா மற்றும் ஐந்து வேறு மொழிகளை இரண்டாவது ஆட்சி மொழிகளாக அறிவித்திருக்கிறது.//

கிருஷ்ணன் தெரிந்து தான் பேசுகிறாரா அல்லது வேண்டுமென்றே உளறுகிறாரா என்று தெரியவில்லை. ஒரு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் வேறுபாடு இருக்கிறதா இல்லையா . ஒன்றிய அரசு அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் . அது தான் நம் கோரிக்கை. ஒன்றியம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டாச்சியே தவிர ஒற்றை ஆட்சி அல்ல. மாநில அரசு என்பது கூட்டாச்சி அல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அரசு. ஒரு தேசிய இனத்தின் சார்பில் இயங்கக் கூடியது. ஆனால் ஒன்றிய அரசு ஒரு மொழிக்கு சார்பாக அல்லது ஒரு தேசிய இனத்திற்கு சார்பாக நடந்து கொள்ள முடியாது. மேலும் இந்தியாவில் இந்தி அல்லாத மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அதனால் இந்தி அல்லாத மக்களிடம் இந்தியை திணிப்பது அநீதியானது . மாநிலங்களில் அவ்வாறு இல்லை. மாநிலங்களில் தேசிய இனத்தவர்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் மொழியே மண்ணின் மைந்தர்களின் தாய் மொழியாகவும் உள்ளது. அதனால் அது ஆட்சி மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு மாநில மொழிகளுக்கு ஆட்சி மொழி அதிகாரத்தை தரக் கூடாது என்றும் தமிழக அரசு எல்லா மொழிகளுக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கிருஷ்ணன் கூறுவது விசமத்தனமானது, கயமை நிறைந்தது. இந்திய அரசின் சூழ்ச்சியை வெளிபடுத்துவதுமாக உள்ளது. பி. ஏ கிருஷ்ணன் நேரடியாக தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கிறார். தேசிய இனங்களே இல்லை என்ற வாதத்தையும் முன்வைக்கிறார். தேசிய இனங்களில் மொழி, அரசியல், பண்பாட்டு, வரலாற்று உரிமைகளை இந்திய அரசு மறுத்து வருவதை இவர் நேரடியாக ஆதரவு தருகிறார்.. இந்தி அரசு குரலாக ஒலிக்கிறார். இந்தி அரசையும்  இவரை போன்றவர்களையும்  எதிர்த்து நம் மொழி உரிமையை நாம் நிலைநாட்டுவோம்






[vuukle-powerbar-top]

Recent Post