Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறள் எழுதப்பட்டு திருவள்ளுவர் சிலையுடன் திருவள்ளுவர் நகர் உருவாக்கம் ! 

உடுமலைப்பேட்டை அருகே பூவிளைவாடி எனும் ஊரில் "திருவள்ளுவர் நகர்" ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு திருவள்ளுவருக்கு சிலை எழுப்பப்பட்டு திருக்குறளும் எழுதப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மிக வேகமாக பல குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டாலும், இந்த குடியிருப்புகள் பெரும்பாலும் சமஸ்கிருத, ஆரிய பண்பாட்டு பெயர்களையே தாங்கி வருகிறது. தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத பெயர்களையே சூட்டுகிறார்கள் மனை வணிகர்கள். தமிழர்களுக்கான பெர்யர்களை அடையாளத்தை மறந்தும் சூட்டுவதில்லை. இந்நிலையில் திருவள்ளுவர் நகர் என்று பெயர் சூட்டியதும் இல்லாமல் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பி திருக்குறள் நெறியை பரப்ப வேண்டும் என்று எண்ணிய இந்த உணர்வாளர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் தமிழர் அடையாளத்துடன் கூடிய குடியிருப்பு பகுதிகளை அதிக அளவில் நாம் உருவாக்க முன்வர வேண்டும். தொல்காப்பியர் , ஒளவையார், கணியன் பூங்குன்றனார், ஐம்பெருங்காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், திணைகள், பூக்கள், தமிழர் கலைகள் முதலான பெயர்கள் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கினால் மட்டுமே நாம் தமிழர் வரலாற்றை வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். திருவள்ளுவர் நகர் போல மேலும் பல நகரங்கள் தமிழர் நாடெங்கும் உருவாகட்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழகம் !




[vuukle-powerbar-top]

Recent Post