Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெங்களூர் மாநகராட்சி தேர்தல். தமிழர்கள் இம்முறை தங்கள் பலத்தை காட்டுவார்களா ?

பெங்களூர் நகரம் வரலாற்று ரீதியாக தமிழகளுக்கு சொந்தமான நகரமாகும். பெரும்பான்மை தமிழர்கள் செறிவாக வாழும் நகரம். இருப்பினும் தமிழர்கள் இங்கே அதிகாரமற்று ஏமாளிகள் போலவே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழர் பகுதிகளுக்கு சரியான சாலை, குடிநீர் வசதிகள் கூட கிடைப்பதில்லை. பல குப்பங்களில் தமிழர்கள் மிரட்டப்பட்டு வெளியேற்றப் படுகிறார்கள். தமிழர்களுக்கான பலமான கட்சிகளும் அங்கு இல்லாத நிலையில் தமிழர்கள் ஆதரவற்றவர்களாகவே உள்ளனர். இத்தனை ஆண்டுகள் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து அவர்களுக்கு மதுவும், பிரியாணியும் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளன சில தேசிய கட்சிகள். வாக்குகளுக்கு மட்டுமே தமிழர்களை பயன்படுத்தி தேர்தல் முடிந்தவுடன் அவர்களை எந்த கட்சியும் கண்டு கொள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகள் கன்னடர்கள் பகுதிகளை போல வசதிகளுடன் இருப்பதில்லை.

தமிழ்ச் சங்கங்கள் கொஞ்சம் பலம் பொருந்தி  இருப்பதால் தமிழர்கள் தங்களுக்கான பேரம் பேசும் சக்தியை தற்போது தக்க வைத்துள்ளனர். இப்போது தான் தமிழர்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது . தங்கள் தமிழ்த் தேசிய பேரினம் என்று உணரத் தொடங்கி உள்ளனர். பெங்களூரில் உள்ள 198 மாமன்ற இருக்கைகளில் சுமார் 40 இருக்கைகள் வரை தமிழர்களுக்கு இம்முறை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. மாநகராட்சி தேர்தலில் மட்டுமல்லாது கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழர்கள் வெற்றி பெற்றால் தான் அங்கு தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழ்ப் பள்ளிகள் பாதுகாக்கப்படும். தமிழக அரசின் துணையில்லாமல் தான் கர்நாடக வாழ் தமிழர்கள் உள்ளனர். அவர்களை அவர்களே பாதுகாக்கும் விதமாக தமிழர்கள் பெங்களூரிலும் கர்நாடகாவிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் . தமிழகத்தில் பெரும்பான்மையாக தமிழர் அல்லாதவர்களே ஆட்சியில் இருக்கும் நிலையில் கர்நாடகாவில் இன்னும் பெரும்பான்மை தமிழர்கள் ஆட்சி அதிகாரம் இல்லாமலே இருக்கின்றனர் என்பது வேதனையான செய்தி. நாளைய தேர்தலில் தமிழர்கள் அதிக இடங்களை வெற்றி பெற தமிழகத் தமிழர்களின் சார்பில் நம் வாழ்த்துகளை பகிர்வோம்.
 

எனவே பெங்களூரிலுள்ள 28 சட்டசபை தொகுதிகளிலாகட்டும், பெங்களூர் நகரின் 198 வார்டுகளிலாகட்டும், வேட்பாளர்கள் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்களே விளங்குகிறார்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post