Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இந்தித் திணிப்பை உடனே அகற்றுக.  தமிழக அரசுக்கு கோரிக்கை !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக நடுவண் அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளிலும் இந்தித் திணிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் என்பது தமிழக அரசின் தீர்மானமாக இருக்கும் நிலையில் இந்திய அரசு வேண்டுமென்றே இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது. தேசிய நெடுச்சாலைகளில் தமிழுக்கு இடம் கொடுக்காமல் இந்தியை மட்டுமே பல இடங்களில் எழுதி வருகிறது. மைல் கற்களில் இந்தியில் மட்டுமே ஊரின் பெயர்களை எழுதி வருகிறது. தமிழக நகரங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளிலும் இந்தியில் மட்டுமே எழுதி வைத்துள்ளது நடுவண் அரசு நிறுவனம். இது தமிழர்களின் மொழி உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் ஆட்சி மொழியான தமிழ் மொழியும், தொடர்பு மொழியான ஆங்கிலமும் மட்டுமே நெடுஞ்சாலைகளில் இருக்க வேண்டும். இப்படித்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது . ஆனால் இப்போது தமிழக அரசின் அலட்சியப் போக்கால் இந்தி கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியும் இதை பற்றி கண்டுகொள்வதாக தெரியவில்லை.

தமிழர்கள் இனியும் இப்படியான மொழித் திணிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இந்தி மட்டுமே இருக்கக் கூடிய அறிவிப்பு , தகவல் பலகைகளில் தமிழ் அமைப்புகள் கருப்பு மை கொண்டு அழிக்க முன்வர வேண்டும். தேவையே இல்லாத இந்தித் திணிப்பை தமிழர்கள் அகற்றிட எப்போதும் தயங்கக் கூடாது. மேலும் இப்படியான இந்தித் திணிப்புக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல், அறிவிப்பு பலகைகள் மற்றும் நகரங்களின்  தகவல் பலகையில் உள்ள இந்தித் திணிப்பை தமிழக அரசு உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.




[vuukle-powerbar-top]

Recent Post