Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய தேசியக் கொடியுடன் திருவள்ளுவர். திருவள்ளுவரை இதை விட யாரும் கொச்சைப்படுத்த முடியாது !!

கரூரில் 2500 மாணவ - மாணவிகள் திருவள்ளுவர் வேடம் அணிந்து, 12 நிமிடம் 21 நொடிகளில் 50 திருக்குறள் வாசித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் திருக்குறளில் உள்ள 5 அதிகாரத்திலிருந்து 12 நிமிடம் 21 நொடிகளில் 50 திருக்குறளை வாசிக்க கூடியிருந்த அனைத்து மாணவ, மாணவிகளும் முற்றோதல் செய்து புதிய உலக சாதனையாக நிகழ்த்தி சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர்.

இது சாதனை  என்றாலும் இந்நிகழ்ச்சியில் பெரும் வேதனையும் இடம்பெற்றுள்ளது. உலகம் போற்றும் பொதுமறையான திருக்குறளை எழுதிய வள்ளுவரின் வேடமிட்ட மாணவர்களின் கைகளில் இந்தியக் கொடியை திணித்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் . திருவள்ளுவருக்கும் இந்திய தேசிய கொடிக்கும் என்ற தொடர்பு உள்ளது? திருவள்ளுவர் வாழ்ந்த போது இந்தியா என்ற நாடே இல்லையே. உலக வழிகாட்டி நூலாக, தமிழர்களின் ஒப்பற்ற மறையாக திருக்குறள் இயற்றப்பட்டது. இதை இந்திய நாட்டிற்குள் மட்டுமே அடைத்திட முடியாது.  மேலும் பல மாணவர்களுக்கு காவி உடை தரித்து திருவள்ளுவர் போல வேடமிட்டு உள்ளனர்.

இது தவிர  மகாகவி பாரதியார், ஈ.வே.ரா பெரியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மாள், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் உருவத்தை மாறு வேடமாக பள்ளி மாணவ, மாணவிகள் இட்டு ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மகிழ்வித்தனர். திருவள்ளுவருடன் தேவையே இல்லாமல் தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத தலைவர்கள், தமிழினத்தின் பகைவர்களின் வேடங்களும் அணிந்து திருவள்ளுவரின் தனித்துவத்தை கெடுத்து உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருண் விஜய் திருவள்ளுவரின் புகழை இந்தியா முழுவதும் சென்று சேர்க்க பல முயற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய தருண் விஜய் இந்திய பிரதமர் மோடியின் ஒப்புதலோடு, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் திருக்குறளில் பாடப்புத்தகத்தில் சேர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழை நீதிமன்ற மொழியாக்க கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க  வேண்டும் , திருக்குறளை இந்தியா முழுவதும்  கொண்டு போக  வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இக்கோரிக்கை ஏற்கனவே தமிழர்கள் தருண் விஜய் அவர்களிடம் வைத்துள்ளனர். தமிழர் பண்பாட்டு நடுவமும் இக்கோரிக்கையை தருண் விஜய் அவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் அதே நேரம் திருவள்ளுவரை ஒரு ஆரிய மதத் துறவியாக சித்தரிக்க முயல்வது கண்டனத்திற்குரியது . திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ருத்திராட்சக் கொட்டை வளையங்கள் மாலை அணிவிப்பது அவரை  ஆரிய வேத  மதத்திற்குள் கொண்டு செல்லும் உத்தியாகும். ஆரிய வேத மகரிசியில் ஒருவராக திருவள்ளுவரை சேர்க்க நினைப்பது பெரும் பிழையாகும். இந்துத்வா ஆரிய கடின சித்தம் கொண்ட  சாமியாராக திருவள்ளுவரை மாற்றுவதும் ஏற்புடையது அல்ல.

திராவிடம் ஏற்கனவே திருவள்ளுவரையும் தமிழ் மொழியையும் தாழ்த்திக் கேவலப்படுத்தியது. ஆரியம் அவ்வாறு செய்யாமல் திருக்குறளை பெருமைப் படுத்துவதாக கூறி திருவள்ளுவரை இந்துத்வா கூடாரத்தில் அடைக்க நினைக்கிறது. இது தமிழர்களின் அடையாளத்தை திட்டமிட்டு அவமதிக்கும் செயலாகும். திருவள்ளுவர் வேடமிட்டு இந்தி தேசியக் கொடியை மாணவர்களிடம் திணித்தமைக்கு நம் வன்மையான கண்டனங்கள். திருவள்ளுவரை இதை விட கேவலமாக யாரும் கொச்சைப்படுத்த முடியாது . இப்படி செய்வதற்கு இப்படியான சாதைனையை நிகழ்த்தாமலே இருக்கலாம் . தமிழர்களின் அடையாளத்தை ஆரியமும் திராவிடமும் சீர்குலைக்க தமிழர்கள் நாம் அனுமதிக்கக் கூடாது.






[vuukle-powerbar-top]

Recent Post