Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சுதந்திர நாளன்று இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய #StopHindiImposition ட்விட்டர் குறியீடு !

இன்று இந்திய சுதந்திர நாளில் இந்தி அல்லாத தேசிய இனங்களை சேர்ந்த மொழி ஆர்வலர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக ட்விட்டர் இணையதளத்தில் பலமான பரப்புரையை மேற்கொண்டனர். இந்தியாவில் இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பு இருக்கக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள 22 பட்டியல் மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் ட்விட்டர் தளத்தில் #StopHindiImposition  என்ற குறியீட்டை பயன்படுத்தி பதிவுகள் இட்டனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய இப்பரப்ரையில் சில மணிநேரத்தில் இந்திய அளவில் #StopHindiImposition குறியீடு முதல் பத்து இடங்களில் இடம்பிடித்தது, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் முதல் இடத்தையும் பிடித்தது. இப்பரப்புயையை அதிக அளவில் மேற்கொண்டது தமிழர் அல்ல, கன்னடர்களே என்பதும் குறிப்பிடத் தக்கது. கன்னடர்கள் மிகத் தீவிரமாக இந்தித் திணிப்புக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர். காரணம் இந்தித் திணிப்பால் கன்னடர்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது தான்.

இந்த ட்விட்டர் பரப்புரை இந்திய அளவில் முன்னிலைக்கு வந்ததால் இந்தி ஆதரவாளர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏன் இந்தி மொழி இந்திய அல்லாத மக்களின் மீது தீணிகப்படக் கூடாது என்று பல செய்திகளை ஆதாரங்களை அடுக்கடுக்காக பரப்புரையாளர்கள் பதிவு செய்தனர். தமிழர்கள் கூட இந்திக்கு ஆதராவாக இருந்த நிலையில் , இன்று ட்விட்டர் தளத்தில் வெளியான செய்திகள் இந்தி ஆதரவு தமிழர்களுக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களுக்கும் இந்த பரப்புரை பெரும் விழிப்புணர்வு கொடுத்தது . இந்தியாவில் எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும், மொழி சம உரிமை வேண்டும் என்பதை இப்போது இந்தி அல்லாத மக்கள்  உணர்ந்து கொண்டனர். இன்னொரு பக்கத்தில் இந்தி ஆதரவளார்கள் பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தி மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வேறு மொழிகள் ஆட்சி மொழியாக வரக் கூடாது என்றும் பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தி அல்லாத மக்களை திட்டித் தீர்த்தனர். எந்த நிலையிலும் இந்தி அல்லாத மொழிகள் இந்திக்கு நிகரான இடத்தை பிடிக்கக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக உள்ளனர்.

இருப்பினும் இன்று இந்தி அல்லாத மக்கள் உருவாக்கிய மொழி சம உரிமைக்கான குரல் நாடெங்கும் உள்ள இணைய பயன்பாட்டாளர்களை சிந்திக்க வைத்தது நமக்கு கிடைத்த பெரும் வெற்றியே. இனியாவது இந்தி அல்லாத மாநிலங்களின் அரசு தங்கள் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூட்டாக சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும். மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இது குறித்த தீர்மானத்தை முன்மொழிய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இது குறித்து அக்கறையுடன் குரல் எழுப்ப வேண்டும். அப்போது இந்தி அல்லாத மக்களின் மொழிகளும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். வரும் காலத்தில் இன்னும் பலமாக இந்தித் திணிப்புக்கு எதிரான பரப்புரையில் தேசிய இனங்கள் ஈடுபட வேண்டும்.

இன்று ட்விட்டர் பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட, பகிரப்பட்ட  சில பதிவுகளை இங்கு இணைத்துள்ளோம்.









[vuukle-powerbar-top]

Recent Post