Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2016 ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களம் காணும் ! தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு !

இப்போதைய அரசியல் சூழலில் அதிமுக திமுக மோதல் என்ற புள்ளியை கடந்து அதிமுக, திமுக, பாமக மோதல், அதிமுக, திமுக ஆறு கட்சி கூட்டணி மோதல் அதிமுக, திமுக ஐந்து கட்சி கூட்டணி மோதல் அதிமுக, திமுக நாம் தமிழர் மோதல் என தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிய நிலையில் 2016 ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களம் காணும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறோம்.

அதிமுக வை எதிர்த்து போட்டியிட பலமான  கட்சி தற்போது இல்லை . திமுகவும் தோற்கடிக்கப் பட வேண்டிய இன்னொரு ஊழல்வாத திராவிடக் கட்சியே. நாம் தமிழர் கட்சியும் பாமகவும் தமிழர் கட்சிகளாக இருந்தாலும் இவ்விரு கட்சிகளும் எந்த ஒரு கூட்டணிக்கும் வர அணியமாக இல்லை. இவர்கள் இணையும் நிலையும் இல்லை. ஒற்றைத் தலைமை கட்சிகளாகவே இவை உள்ளன.  தமிழர் கட்சிகள் ஒற்றுமை இல்லாத நிலையில் மீண்டும் அதிமுகவே சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என்ற நிலை உள்ளது.

தெலுங்கு இன வெறியன் சந்திரபாபு நாயிடு இருபது பேரை சுட்டுக் கொன்று அதற்கு ஒரு நடுவண் புலனாய்வு குழு விசாரணையைக் கூட கூட்டாத அதிமுக 2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கு நாம் கையில் எடுக்க வேண்டியது இன நல அரசியல் மட்டும் தான்.  

தமிழகத்தை தமிழர் ஆள்வதா தமிழரல்லாதவர் ஆள்வதா என்ற ஒற்றை கேள்வியை முன் நிறுத்தி ஒரு கூட்டணி உருவானால் அக்கூட்டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கருதுகிறோம்.

தனி ஒரு தமிழர் கட்சியால் பெரும்பான்மை  பலத்தை பெற்று ஆட்சி அமைக்க முடியாத சூழல் தான் இன்றளவும் தமிழகத்தில் நிலவுகிறது. இன நலம் சார் தமிழர் அமைப்புகள் அனைத்தும் ஒரு கூட்டமைப்பின் கீழ் இணைந்து வரும் தேர்தலில் திராவிட, தேசிய கட்சிகளுக்கு எதிராக பரப்புரை செய்தால் மட்டுமே அதிமுக திமுக பாஜக காங்கிரஸ்  போன்ற மக்கள் விரோத கட்சிகளின் அயோக்கியத்தனங்களை  மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இன நலம் சார் அரசியலையும் நாம் முன்னெடுக்க முடியும்.  நம் பரப்புரை திராவிடக் கட்சிகளின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பது உறுதி.

திராவிடம், பெரியாரியம், ஆரியம், இந்திய தேசியம்  போன்ற தமிழர் விரோத கருத்தியலை எதிர்க்கும் தமிழின நலன் சார் அமைப்புகள், கட்சிகள் யாவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து வரும் தேர்தலில் களம் காண வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். தனியாக நின்று தான் தேர்தலில் களம் காணுவோம் , கூட்டணி எதிலும் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லும் எந்த கட்சிக்கும் நாம் அழைப்பு கொடுக்கவில்லை. சர்வாதிகாரம் இல்லாத தமிழர் கூட்டுத் தலைமையை விரும்பும் அரசியல் அமைப்புகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்து தமிழர் விரோத கட்சிகளை எதிர்த்து களம் காண்போம்.  விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் குறித்தான ஆலோசனை கூட்டம் சென்னையில் கூட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அமைப்புகள், கட்சிகள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் . உங்கள் தொடர்பு எண்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

நன்றி
க. அதியமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



[vuukle-powerbar-top]

Recent Post