Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில கட்சி என்று ஒரு கட்சியை தமிழக வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ் நடத்தி வருகிறார். இக்கட்சியின் விளம்பரத்தில் அனைவருக்கும் கட்டாய தமிழ் கல்வி, கட்டாய இந்தி, தமிழ் மக்களுக்கு மும்மொழிக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்ததும் இக்கட்சியை தொடர்பு கொண்டு ஒருவரிடம் பேசினேன். தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று எழுதியுள்ளீரே , இந்தி மாநிலத்தில் தமிழை கட்டாயமாக்கினால் இந்திக் காரன் நம்மை அடிக்க மாட்டானா என்று கேட்டேன். அதற்கு அவர் இந்தி மாநிலத்தில் நாம் தமிழை திணிக்கக் கூடாது, நாங்கள் சொல்வது தமிழ் மாநிலத்தில் மட்டும் தான் என்று கூறினார்.

பிறகு, நான் கேட்டேன் , அப்படியென்றால் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் கட்டாய இந்திக் கல்வி என்று விளம்பரம் செய்துள்ளீர் . தமிழன் மட்டும் திருப்பி அடிக்க மாட்டானா ? என்று கேட்டேன்.

அதற்கு அவர், ஆமாம் தமிழர்கள் கட்டாயம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும், ஒரு மொழியை நாம் கற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று கூறினார். மேலும் தமிழர்கள் வடமாநிலங்கள் சென்றால் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்றும் கூறினார். சரி வடநாட்டு காரன் தமிழ் படிக்காமலே இங்கு வருகிறார்களே , இங்கு வந்து தானே அவர்கள் தமிழ் கற்கிறார்கள் என்று கேட்டதும் அதற்கு சரியான பதில் அவரிடம் இல்லை.

பிறகு அவர் சற்று எரிச்சலுடன் , எங்கள் கட்சி கொள்கை இது தான் , நீங்கள் விருப்பட்டால் இணையுங்கள் , இல்லையென்றால் விலகுங்கள். சுவற்றில் முட்டிக் கொள்ளுங்கள் என்று நாங்கள் விளம்பரம் செய்தால் நீங்கள் முட்டிக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அப்போது இந்தித் திணிப்பு கொள்கையும் அந்த அளவில் தான் இவர்கள் கருதுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும், நடுவண் அரசு சேவைகள் எங்கள் மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, அவர் இதற்கு நீங்கள் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறி விட்டார்.

இவ்வாறாக இந்தியை திணிப்பதற்கே ஒரு கட்சியை இங்கு தமிழ் மாநில கட்சி என்று ஒரு கட்சியை தொடங்கி உள்ளனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது . செப் 19-20 மொழியுரிமை மாநாட்டிற்கு கட்டாயம் வாருங்கள் என்று கூறி அழைப்பை முடித்தேன்.

Tamil Maanila Katchi,  PH: 044-65557848, MOBILE: 9962366677
http://www.tamilmaanilakatchi.com/
[vuukle-powerbar-top]

Recent Post