Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வட சென்னையில் தமிழர் அடையாளத்துடன் கூடிய வீட்டில் குடிபுகுந்தோம் !

பிறந்தது முதல் சென்னையில் வாழ்ந்திருந்தாலும் தமிழர் அடையாளத்துடன் கூடிய ஒரு வீட்டில் குடிபுக வேண்டும் என்பது நம் நீண்ட நாள் கனவு. அக்கனவு இப்போது நிறைவேறியது. தமிழர்கள் மறந்த அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு சங்க இலக்கிய நூலான 'நற்றிணை' என்னும் நூலின் பெயரையே வீட்டிற்கு  வைத்தோம். ஐந்து வகையான திணைகளை உள்ளடக்கியது தான் பழந்தமிழர் நாடு என்பதை காட்டவும், சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள அக வாழ்வு முறையை சிறப்பாக விளக்கும் நற்றிணை நூலின் பெயரையே எங்கள் இல்லத்தின் பெயராக வைத்தோம்.

பெயர் சூட்டிய பிறகு தமிழர்கள் பலரும் நற்றிணை என்றால் என்ன என்று எங்களிடம் கேட்கின்றனர். அந்த அளவில் தான் தமிழர்களுக்கு தங்கள் வரலாறு தெரிந்துள்ளது என்பது வேதனை தான் . இருப்பினும் நற்றிணை என்னும் நூலை தொகுத்த பன்னாடு தந்த மாறன் வழுதியை பற்றியும் நற்றிணை பாடிய புலவர்கள் பற்றியும் தமிழர்களுக்கு கூறி வருகிறோம்.

அடுத்ததாக வீட்டின் இலக்கத்தை தமிழில் எழுதி மக்களிடம் கொண்டு செல்ல முயன்றோம். பலரும்  தமிழ் எண்களை வியப்புடன் பார்த்து விட்டு செல்கின்றனர். தமிழர் மறந்து போன தமிழ் எண்களை தமிழகத்தின் அனைத்து இல்லந்தோறும் எடுத்து செல்ல வேண்டும் என்பதே நம் அவா !

முகப்பில் உலகப் பொது நெறி வழங்கிய உலக ஆசானாக விளங்கும் வள்ளலாரை வைத்துள்ளோம். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்ற அவருடைய சிறப்பான கொள்கை சொற்றொடரை வைத்து தமிழர்கள் அனைத்து உயிர்களுக்காக சிந்திக்கும் உயர்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

இல்லமே நம் முகவரி, நம் அடையாளம். அதை தமிழர் அடையாளமாக மாற்றுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். வீடுகள் தோறும் தமிழ்நெறி விளங்க தமிழர் வாழ்வு செழிக்க நற்றிணை இல்லத்தாரின்  வாழ்த்துகள். வாழ்க தமிழ் ! 
[vuukle-powerbar-top]

Recent Post