Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது !

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சொந்த நாட்டில் சொந்த மக்களால் நடத்தப்படக் கூடிய வணிகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழர்களின் பணத்தை எல்லாம் திரட்டி வெளிநாட்டில் இருந்து மாபெரும் கப்பலை ஒட்டி வந்த வீரத் தமிழர் வ.உ. சிதம்பரனார். அந்நியர்கள் நம்மை ஆளக் கூடாது, நம்மை நாமே ஆளவேண்டும் என்ற பெரும் வேட்கையிலும், மண்ணின் மைந்தர்களே வணிகத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணி போராடியவர். அன்னாரின் பிறந்த நாளில் தமிழ் நாட்டை தமிழரே ஆளவும் தமிழர் வணிகத்தின் ஆளுமையை தமிழ்நாட்டில் நிலை நாட்டவும் வ. உ. சிதம்பரனார் ஐயாவின் பிறந்த நாளில் தமிழர்கள் நாம் சூளுரைப்போம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திரு. அதியமான், திரு, சண்முகம், திரு. இராச்குமார் பழனிசாமி, திரு. அக்னி ஆகியோர் வீரத் தமிழர்களுக்கு சென்னையில் புகழ் வணக்கம் செலுத்தினர்   
[vuukle-powerbar-top]

Recent Post