Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நவ 1 தாயகத் திருநாள் விழா மற்றும் தமிழகத் பொதுத் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழகத்தில் வரவுள்ள 2016 தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தமிழகமெங்கும் நிறுத்த திட்டமிட்டுள்ளது . தமிழ் மொழி, தமிழ் இனம் , தமிழர் நாடு ஆகிவற்றை உண்மையாக நேசிக்கும் தமிழர்கள் , தமிழர் அமைப்புகள் கூட்டமைப்பில் இணைந்து வரும் தேர்தலில் நிற்கலாம்.

தேர்தலில் நிற்கும் நபர்கள் கூட்டமைப்பின் பொதுவான செயல்திட்டங்களை ஏற்க வேண்டும்.

௧. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும். தமிழக அரசின் கீழ் செயல்படும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர்களே இருத்தல் வேண்டும்.

௨. தமிழ் மொழியே தமிழக அரசின் முழுமையான ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஆட்சி மொழியாக மாநில மொழிகள் அனைத்தும் இருக்க வேண்டும்.

௩. எல்லா தமிழ் சாதிகளும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை கொண்டிருக்க வேண்டும். சாதிகளில் உயர்வு தாழ்வு என்பதை எந்த வகையிலும் கற்பிக்கக் கூடாது.

௪. திராவிடம், தலித்தியம், பொதுவுடைமை  போன்ற தமிழினத்தை கூறுபோடும் கருத்தியலுக்கு இடமளிக்கக் கூடாது. நாம் அனைவரும் தமிழர்களே என்ற இன உணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக வேற்றின மக்களை தமிழர்களுக்கு தந்தை , ஆசான் என்பது போன்ற கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது.

௫. தமிழ் மொழியை, தமிழ் இனத்தை, தமிழர் நாட்டை எந்த நிலையிலும், வகையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

௭. தமிழர்கள் எந்த மதத்தை தழுவினாலும் இனத்தால்  நாம் அனைவரும் தமிழர்களே என்ற புரிதலுடன் மத வேறுபாடுகளை ஊக்குவிக்கக் கூடாது. பிற மதங்களை தூற்றவும் கூடாது.

இவ்வாறான அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்கக் கூடிய தமிழர்கள் , தமிழர் கட்சிகள், இயக்கங்கள் , அமைப்புகள் கூட்டமைப்பில் இணைந்து வரும் தேர்தலில் தமிழர்களுக்கான கட்சியாக தமிழர்களின் குரலாக தமிழக மக்களிடம் செல்வோம். நமக்கான அதிகாரத்தை பெற்று தமிழினத்தை , தமிழர் நாட்டை மேன்மையுறச் செய்வோம். தேர்தல் குறித்த இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் .

நாள் 01-11-2015 , நேரம் காலை முதல் மாலை வரை
இடம் - இக்சா அரங்கம் , எழும்பூர் , சென்னை
தொடர்புக்கு - 9962 560760 
[vuukle-powerbar-top]

Recent Post