Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் மொழிக்கான பொதுக் கொடியை உருவாக்க தமிழ்த் தேசிய / தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு !

கன்னட மொழிக்கென்று தனிக் கொடி உள்ளது. கன்னட தேசம் பிறந்த நாளில் கன்னட தேசம் முழுவதும் கன்னட கொடி பறப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் தமிழ்த் தேசிய திருநாளில் , தமிழர் திருநாளில் நம்மால் தமிழ்க் கொடி என்று எதையும் காண முடிவதில்லை. கன்னட தேசிய இனத்தை காட்டலும் மூத்த குடியான தமிழ்த் தேசியத்திற்கு பொதுவான கொடி தமிழகத்தில் இல்லை. தமிழக அரசும் தமிழ் மொழிக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்க வில்லை. இதனால் தமிழர்கள் தங்களுக்கான பொது அடையாளத்தை பயன்படுத்த முடியாத நிலை தான் இன்றளவும் உள்ளது. தமிழ் மொழிக்கான பொதுக்கொடி உருவானால் அதை எல்லா தமிழர்களும் தங்கள் இல்லங்களின், பள்ளிகளில், பொது இடங்களில் பயன்படுத்தலாம். தமிழக அரசும் அக்கொடியை பயன்படுத்தலாம். ஏன் , தமிழக சட்டமன்ற வளாகத்தில் கூட தமிழ் மொழிக்கான கொடியை பறக்கவிடலாம். தமிழக அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அரசு விழாக்களில் தமிழ் கொடிக்கு முதல் மரியாதை செலுத்தலாம் . ஆனால் இதெல்லாம் நடைபெற தமிழ் மொழிக்கான பொதுக்கொடி உருவாக வேண்டும் என்பது தமிழினத்தின் நீண்ட நாள் அவாவாகும்.

அந்த வகையில் இப்போது தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து தமிழ் மொழிக்கான பொதுக்கொடியை தேர்வு செய்ய காலம் கனிந்து விட்டது . நாம் அனைவரும் ஒருமனதாக ஒரு கொடியை தேர்வு செய்து அதை தமிழ் மக்களிடமும் அரசிடமும் கொண்டு சேர்க்கும் பணியை செய்தல் மட்டுமே நம் அடுத்த தலைமுறைக்கு அடையாளம் கிடைக்கும். இம்முயற்சியில் ஈடுபட நாம் தமிழ், தமிழ்த் தேசிய அமைப்புகளிடம் அழைப்பு விடுக்கிறோம் . திராவிட இந்தி தேசிய கருத்தியல் கொண்டவர்களுக்கு நாம் அழைப்பு கொடுக்கவில்லை . அதனால் தயவு செய்து அப்படியான அமைப்புகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ், தமிழர் பால் உண்மையான அக்கறை உள்ள தமிழர் அமைப்புகள் இந்த வரலாற்று பணியை தொடங்கி வைக்க வருகை தருமாறும் , உங்கள் மேலான ஆலோசனையை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் .

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் பண்பாட்டு நடுவம் , தமிழர் முன்னேற்றக் கழகம் .  
[vuukle-powerbar-top]

Recent Post