Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் உணவகம். தமிழில் பற்றுச் சீட்டு. பாராட்டுகள் !

பெரம்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள இந்த உணவகத்தின் பெயர் முத்தமிழ் உணவகம். இப்பெயருக்காகவே இங்கு உணவு வாங்க வேண்டும் என்று இங்கு சென்றேன். சென்னையில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் தமிழில் உணவுப் பட்டியலை வழங்குவதில்லை. அனைத்தும் ஆங்கில மயம் தான். புகழ்பெற்ற உணவகங்களில் சரவண பவன் மட்டுமே உணவுப் பட்டியலை இரு மொழியில் வழங்குவதை காண முடிந்தது. ஆனால் இங்கும் உணவுக்கான பற்றுச் சீட்டு தமிழில் வழங்கப் படுவதில்லை. மற்ற உணவகங்கள் யாவும் ஆங்கிலத்தில் தான் உணவுப் பட்டியலும் பற்றுச் சீட்டும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் பெரும்புரில் உள்ள இந்த முத்தமிழ் உணவகம் தமிழில் பட்டியலும் பற்றுச் சீட்டும் வழங்கி வருவது பாராட்டுக்குரியது. எடுத்துச் செல்லும் உணவிற்கு 'கட்டுணவு' என்று எழுதியிருந்தது சிறப்பு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உணவகமும் இவ்வாறு தமிழில் பற்றுச் சீட்டு வழங்க வேண்டும். உணவுப் பட்டியலும் தமிழில் வழங்க வேண்டும். தமிழில் அருமையான பெயர்ப்பலகை வைத்து தமிழில் பற்றுச் சீட்டும் வழங்கும் முத்தமிழ் உணவகத்திற்கு பாராட்டுகள்.

பி.கு - வெஜி பிரியாணி என்பது தமிழ் இல்லையே . இதை தமிழில் மரக்கறி புலவுச் சோறு என்று தானே எழுதியிருக்க வேண்டும் என்று யாரும் சண்டைக்கு வரவேண்டாம். இந்த அளவிற்காவது தமிழில் மென்பொருள் பயன்படுத்தி தமிழில் பற்றுச் சீட்டு கொடுத்தமைக்குத் தான் நம்  பாராட்டுகள்.

[vuukle-powerbar-top]

Recent Post