Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நூறாண்டுக்கும் மேலாக  நீடித்த எழும்பூர் 'ஆல்ஸ்' சாலை இப்போது தமிழ்ச் சாலை ஆனது! 

சோழர்கள் பெயர் வைத்த எழும்பூர் நாடு என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் எக்மோர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது . இப்போது பலருக்கும் எழும்பூர் என்றால் தெரியாது . எக்மோர் என்று சொன்னால் தான் தெரியும். இது போலவே எழும்பூர் பகுதியில் உள்ள ஆல்ஸ் சாலையும் 1827 இல் மறைந்த ஆங்கிலேயரான ஆமில்டன் ஆல்ஸ் என்பவற்றின் நினைவாக இப்பெயரை பெற்றது. ஆங்கிலேயர்கள் இம்மண்ணை விட்டு போனாலும் இன்னும் அவர்கள் பெயரில் பல்லாயிரம் சாலைகள் தமிழகத்தில் உள்ளன. இந்த ஆல்ஸ் சாலையில் தான் தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும்  உள்ளன . இச்சாலைக்கு தமிழ்ச் சாலை என்று பெயர் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் பல காலமாக குரல் கொடுத்து வந்தனர். அதிமுக ஆட்சியில் இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆணை பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. தமிழ் அமைப்புகள் தொடர்ந்து பெயர் மாற்றத்திற்கான கோரிக்கையை வைத்து வந்தன . முடிவில் 2015 செப்டம்பர் மாதம் தான் இந்த சாலை தமிழ்ச் சாலை என்று அதிகாரப் பூர்வமாக பெயர் சூட்டப் பெற்றது. தமிழகத்தில், அதுவும் சென்னையில் ஒரு முக்கிய சாலை  தமிழ் மொழியில் தமிழ்ச் சாலை என்று பெயர் பெறுவது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். 

தமிழ் 
[vuukle-powerbar-top]

Recent Post