Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எங்கள் பகுதியின் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து உரையாடினேன். எங்கள் குடியிருப்பு பகுதியில் புதிதாக பிள்ளையார் கோவில் கட்ட இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார். இதை பற்றி பேசும் போது நான் அவரிடம், நம் பகுதியில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப ஒரு கொடுங்கள் என்று ஒரு கோரிக்கை வைத்தேன் . இதை கேட்டதும் சற்றே அதிர்ந்து போன அவர் , அதெல்லாம் முடியாது திருவள்ளுவருக்கு இடம் இப்போது கொடுத்தால் நாளை சிலர் காந்திக்கு இடம் வேண்டும, நேதாஜிக்கு இடம் வேண்டும், புத்தருக்கு இடம் வேண்டும் என்று கேட்பார்கள் . அதனால் திருவள்ளுவருக்கு சிலை வைக்க ஆசைப்பட்டால் உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். நானும் சரிங்க ஐயா, தமிழ் சான்றோர் ஒருவருக்கு இடம் கொடுத்தால் சிக்கல் வருகிறது என்கிறீர் . தமிழ்நாட்டில் வள்ளுவருக்கு இடமில்லை என்றால் வேறு எந்த நாட்டில் அவருக்கு இடம் கொடுப்பார்கள். தமிழர் அடையாளங்களை நாம் தானே நிறுவ வேண்டும் என்று கூறினேன். இப்பெல்லாம் யாருங்க திருக்குறள் படிக்கிறார்கள் . அதனால் இதெல்லாம் வீண் வேலை என்று சொல்லிவிட்டார் . பிறகு அம்மாவுக்கு (ஜெயாவிற்கு ) இசைக் கச்சேரி நடத்தும் வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். சரி முதல் சந்திப்பில் வாதம் செய்ய வேண்டாம் என்று விடை பெற்று வந்து விட்டேன். 

இப்படித் தான் தமிழகத்தில் உள்ள பல நூறு பஞ்சாயத்து தலைவர்கள் தமிழ் உணர்வு இன உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் . திராவிட கட்சித் தலைவர்களை குளிர்விக்க பம்பரமாக வேலை செய்யும் இவர்கள் தமிழர் பண்பாட்டை, தமிழர் அறத்தை , தமிழர் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல எந்த முன்னெடுப்பும் எடுப்பதில்லை. தமிழர் ஆட்சி மலரும் போது தமிழின உணர்வில்லாத எவரும் ஊர்த் தலைவராக வர அனுமதியில்லை . ஒவ்வொரு ஊரிலும் , குடியிருப்பு பகுதியிலும் திருவள்ளுவருக்கு சிலையும் மண்டபமும் எழுப்பப்படும். பிள்ளையார் கோவில்களை விட அதிக எண்ணிக்கையில் திருவள்ளுவருக்கு மண்டபங்கள் காட்டப்படும். தமிழ்த் தேசமெங்கும் திருக்குறள் காணப்படும் நிலையை நாம் உருவாக்குவோம். அதுவரை வாய்ப்பு உள்ள தமிழர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் முடிந்தவரை வள்ளுவருக்கு ஒரு சிலையோ , மண்டபமோ கட்ட முயற்சி செய்யுங்கள். திறந்த வெளி மனை இருந்தாலும் அங்கு வள்ளுவருக்கு சிலை வைக்க முயற்சி செய்யுங்கள். இடம் கொடுத்தால் அங்கு வள்ளுவருக்கு சிலை வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்க அணியமாகவே உள்ளோம். 


[vuukle-powerbar-top]

Recent Post