Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிடர்களின் பல்லிளிக்கும் பகுத்தறிவு , ஆரிய மத எதிர்ப்பு !

திராவிட கட்சி  எதை சொல்லி தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றியதோ இப்போது அதற்கு நேர்மாறான உத்தியை பயன்படுத்தி மக்களிடமா வாக்கு கேட்கிறது. தமிழர்களின் வீரம் செறிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தனதாக்கி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. திராவிடத் தந்தை இந்தி எதிர்ப்பு போராளிகளை மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார். ஆரிய எதிர்ப்பு என்று சொல்லி தமிழர்களுக்கு வகுப்பெடுத்து இன்னொரு பக்கம் ஆரியத்துடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்தது கயமைக்கு பெயர் போன திராவிடம். இன்றும் தமிழர்களிடம் ஆரியப் பூச்சாண்டி வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆரிய மதத்தை பல்லாயிரம் ஆண்டுகள் தமிழர்கள் எதிர்த்து வந்து தான் உள்ளனர். அதற்கான சான்றுகள் ஏராளம் நம்மிடம் உள்ளது. ஏதோ திராவிடம் வந்து தான் தமிழர்கள் ஆரியத்தை எதிர்க்கத் தொடங்கினர் என்ற பொய்யான மாயையை திராவிடர்கள் கட்டமைத்தனர் . ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழர் கோவில்கள் அனைத்தும் ஆரிய மயமானது. தமிழ் முற்றிலும் கோவிலில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் , இல்லங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டது .

இவை அனைத்தையும் செய்து விட்டு இப்பொது அர்ச்சர்கர்களோடு சந்திப்பு நடத்தி வாக்கு சேகரிக்கிறது திராவிடம். தமிழர் கோவில்களில் அனைத்து தமிழ்ச் சாதிகளும் பூசகர் ஆகலாம் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வைத்துள்ளது . தமிழே இங்கு வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழர் கூட்டமைப்பு . இதை நாங்கள் பகிரங்கமாக அறிவிக்கிறோம் . வீரத் தமிழர் முன்னணியும் இதை வலியுறுத்தி உள்ளது. இப்படியான நிலைப்பாட்டை திமுக எடுக்குமா ? தமிழர் கோவில்களில் இருந்து வடமொழியை நீக்கி தமிழில் மட்டுமே வழிபாடு செய்ய திமுக நடவடிக்கை எடுக்குமா ? அல்லது இது குறித்து ஒரு அறிக்கையாவது வெளியிடுமா? நமது வழிபாட்டு தளங்களை மீண்டும் தமிழர் வசமே தமிழர் ஆட்சி ஒப்படைக்கும் . தமிழர் அல்லாதவர்கள் தமிழ் கோவில்களில் வடமொழியில் பூசனை செய்ய அனுமதியோம். திராவிடம் இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது. ஆரியத்தை எதிர்ப்பதோடு ஆரியத்துடன் மறைமுக கூட்டு வைத்துள்ள திராவிடத்தையும் தமிழர்கள் நாம் வீழ்த்துவோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post