Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிடர்கள் எப்படி பதவிக்கு வருகிறார்கள் என்பதற்கு நடிகர் சங்க தேர்தலே சான்று !

வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு இம்முறை நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ் திரைடப்பட சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் போட்டியிட்டது தான். மேலும் திரைப்பட சங்கத்தின் பெயரை தமிழ்நாடி திரைப்பட சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தேசிய வாதிகள் எழுப்பினர். இக்கோரிக்கையை திராவிடர்களும் இந்தி தேச பக்தர்களும் கடுமையாக எதிர்த்தனர். தமிழரே தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்பதை இனவாதம் என்றனர். கலைக்கு மொழி இனம் எல்லாம் கிடையாது என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்தனர் திராவிட ஆதரவாளர்கள். தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து பிற இனத்தவர்கள் வெளியேற வேண்டும், தார்மீக பொறுப்புணர்வுடன் தமிழர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற நம் கோரிக்கையை விசால் ரெட்டி போன்ற தெலுங்கர்கள் செவி சாய்க்கவும் இல்லை. திரைப்பட துறையில் இருக்கும் சில தமிழர்களே இக்கோரிக்கைக்கு ஆதரவாக நின்றனர் . விளைவு என்னவானது என்பதை இப்போது தமிழர்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்த் திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு விசால் ரெட்டி எனும் தெலுங்கர் வந்து அமர்ந்து கொண்டார் . விசால் ரெட்டியை பின்னின்று இயக்குபவர்கள் பண பலம் பொருத்திய ஆந்திர அரசியல்வாதிகள் தான் . தமிழகத்தில் தெலுங்கின ஆதிக்கத்தை நிலைநாட்ட  ஆந்திரர்களால் உருவாக்கப்பட்டவர் தான் இந்த விசால் ரெட்டி . விஜயகாந்த் எவ்வாறு எளிமையாக தமிழகத்தின் எதிர் கட்சி ஆனாரோ அவ்வாறே விசால் ரெட்டியும் பிற்காலத்தில் தமிழக அரசியலில் காலூன்றுவார் . இவருக்கு ஆதரவாக சில தமிழ் நடிகர்களே பரப்புரையும் செய்வார்கள் . தமிழகத்தின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்து சக்தியாக விசால் ரெட்டி நாளை உருவாக்குவார் . இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழ்த் தேசிய அமைப்புகள் கட்சிகள் விசால் ரெட்டியை கடுமையாக் எதிர்த்து வந்தனர். இன்று தமிழர்களின் இந்த எதிர்ப்பு பலன் தரவில்லை என்றாலும் தமிழர்களின் இனம் சார்ந்த இந்த நடவடிக்கை நாளை அரசியலில் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்த் திரைப்பட துறை மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் தமிழர்கள் தான் தலைமை பொறுப்பு வர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசிய அமைப்புகள் மேன்மேலும் வலியுறுத்தும். உணர்வாளர்கள் இந்த கோரிக்கையை வலுப்படுத்தும் விதமாக வரும் காலங்களின் தீவிரமான பரப்புரையில் ஈடுபட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம் .




[vuukle-powerbar-top]

Recent Post